ஆலமரம்
அள்ளி வரும் பூங்கரகம்
கூத்தாடி
பூமியிலே
பொங்கி வரும் சோழவரம்
சோலையாவும்
சேலை கட்டி
பூக்குதடி மாங்குயிலே
மனசார பார்த்து வர
மணி கணக்கு ஆகுமடி.
முட்டிவரை
சேலை உடுத்தி
ஓடிவரும் பூ மையிலும்
பார்வையில கொள்ளுரா
மனசை கண்ணால் கிள்ளுரா
கருவிழி
பார்வைக்குள்ள
வயல்வெளி பூக்குது
அவளின்
கருப்பு பேரழகு
என்னுள் காதலைத்தான் தூண்டுது
சினுங்கி
வரும் பெண்ணழகே
உன் சிகரம் தொட்ட பேரழகை
சிறைப்படுத்த முடியாமல்
தவிக்குதடி எம்மனசு
பொய்க்கால்
குதிரை போல
ஆடி வரும் அழகு ரதியே
உன் வட்டமான முகத்திற்கு
இதழ்கள் தான் வாசல் படியோ
கருப்பு
பேரழகி
உன் கவி கேட்க
காத்து கிடக்கும்
என் செவிகளுக்கு
காதல் ராகம் நீ இசைப்பது எப்போது?
No comments: