முகப்பு
என் அன்பார்ந்த உறவுகளே உங்களுக்கு என் தமிழ் வணக்கம், நீங்கள் கவிதைகள் மீது காதல் கொண்டு இந்த தளத்தில் பயணம் செய்வது என் போன்ற கவிஞனுக்கு நீங்கள் தரும் உணர்ச்சிகளின் உச்சம் , நன்றி உறவுகளே, வாருங்கள் கவிதைகள் பற்றிய தகவல்களை காண்போம்.
என்னிலும் இளையவளே என் வீட்டில் இளைப்பாறும் மருமகளே
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
என்னோடு இருப்பது நீ மட்டும் தானே
எத்தனையோ
சொந்தங்கள் இந்த வீட்டில்
கூட்டு கிளிப் போல்
சுற்றி சுற்றி வந்தது
நான்
பெற்ற பிள்ளையை விட வளர்த்த பிள்ளைகள் பல
பால்
ஊட்டும் போது
என்னோடு தவழ்ந்த பிள்ளைகள்
தட்டு தடுமாறி நடக்க பழகிய பிறகு
எந்தன் வழித்தடத்தை மறந்தது.
ஆயிரம்
வலிகள் நிறைந்த என் வாழ்வின்
ஒத்த உயிர் மூச்சே
நான் பெற்ற ஒத்தப் பிள்ளை தான்
அவனும் இப்படி
பரிதவிக்க விட்டுவிட்டு
பரலோகம் போய்விட்டான்
விட்டக்குரை தொட்டக்குரையாக
அவன் இடத்தில நீ இருக்கிறாய்
என் அன்பு
மருமகளே நீ தான்
இனி என் பிள்ளை.
வா வந்து அமர்ந்து சாப்பிடு.
கருவிழி பார்வையில்
கிறங்கடிக்கும் காதல் சுடரே
உன் கந்தக பார்வையில்
ஜொலிப்பது எந்த அமிலம் ?
பட்டொளி வீசும்
உன் பார்வைக்கு தங்கத்தின் தண்ணீரை எடுத்து முலாம் பூசுகிறாயா?
உன் பார்வை
அந்த கந்தக அமிலத்தின் பார்வைக்கு நிகராக ஜொலிக்கிறதே?
செக்கில்
சிக்கி தவிக்கும் எள்ளு போல
நான் உன் பார்வையின் அர்த்தம் அறியாது சிக்கி தவிக்கிறேன்
உன் பார்வையின் அர்த்தம் அறிய பல கோடி அகராதி புத்தகம் வேண்டுமடி !
நெடுஞ்சாலை பயணத்தில் என்னோடு ஓடிவரும்
தென்றல் காற்றே
ஏன் இன்று மட்டும் இவ்வளவு வேகம்
வானத்தில் வானவில் தோன்றியதால்
உனக்கும் அது மீது காதல் வந்து விட்டதா?
அதனால் தான் நீயும் இப்படி
துள்ளி குதித்து சந்தோஷத்தில்
வேகமாய் வீசுகிறாயா.
கிழக்கே கருமேகம் கூடி வரும் வேளையிலே
தேவதையே நீ எங்கே செல்கிறாய்
உன் பட்டொளி வீசும்
தேகத்திற்கு மஞ்சள் பூசி அழகு பார்க்க
செவ்வானம் வருகிறதே
தேவதையே நீ எங்கே செல்கிறாய்
மெளனங்கள்
நிறைந்தவளே மல்லிப்பூ மனம் நிறைந்தவளே
மழைச்சாரல் வருகிறதே
தேவதையே நீ எங்கே செல்கிறாய்
உன்னோடு உரையாட
ஒத்தையில காத்து இருக்கிறேன்
கருமேகம் வந்தாலும் உன் கரம் பிடிக்க காத்து இருக்கிறேன்
தேவதையே என்னை விட்டு நீ எங்கே செல்கிறாய்.
சாரல் காற்றை சுவாசிக்க போகிறாயா
இல்லை என் மூச்சு காற்றை முத்தமிட போகிறாயா?
காத்து இருக்கிறேன்
உன் பதிலுக்காக
எல்லோரும் வாழ்வின்
நேர்த்தி கூறிக் கொண்டிருக்கிறார்கள்
நான்
நேர்மையில் ஒத்தவன்.
கடவுளும் சுயமாக வாழ்வை
பெற்றவன்.
புறந்தள்ளிகள்
கொஞ்சம் தூரத்திலிருந்து
பார்வையிடுகிறார்கள்.
சொல்லப்படும் நேர்த்தி..
சாஸ்திரம் வாழும் எப்போதும்.
வாழ்ந்து காட்டுங்கள்.
எல்லா வாழ்வும்
வாழ்ச்சி பொறுப்பாகும்.
முடிவுரை
இந்த தமிழ் கவிதைகள் அனைத்தும் நம் வாழ்வில் மிகவும் முக்கியமானவை. என் வருங்கால கவிதைகளுக்கு உங்களின் ஆதரவு தொடர்ந்து தேவை அதை நீங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
No comments: