பிடிவாதமாய் இருந்து விட்டேன்
அதனால் தான் என்னவோ
நித்தமும் கண்ணீரில் குளிக்கிறேன்
உன்னோடு கரை சேர தவிக்கிறேன்
உன் பார்வையை மட்டும் ரசித்து
உன்மீது தீராத ஆசையை வளர்த்தேன்
உன் பேச்சை மட்டும் ரசித்து
உன்மீது தீராத காதலை வளர்த்தேன்
அழகாய் நீ சிரிக்க
அள்ளிப்பூ போல் உன் முகம் ஜொலிக்கும்
எது ஏன் மாமா இப்போது எல்லாம் நீ சிரிக்க மறுக்கிறாய்...
மனசுக்கு பிடித்து தானே
மனசார காதலித்து கரம் பிடித்தாய்
பின்பு ஏன் என் வாழ்வில் இவ்வளவு கண்ணீர்...
ஆடம்பரமாய்
ஏதும் நான் கேட்கவில்லை
அள்ளி முகம் பூச
அழகு பொருட்கள் கேட்கவில்லை
அடுத்த வேலை உணவு கூட
நான் கேட்காமே கிடக்கேனே
இருந்தும் ஏன் மாமா என் வாழ்வில் இவ்வளவு கண்ணீர்...
பெரிய ஆசையோடு
உங்களை நான் கரம் பிடித்தேன்
ஒன்று மட்டும் சொல்கிறேன் கேளுங்கள்
ஏதோ ஒரு குழப்பத்தில்
நீங்கள் இருக்கீறிர்கள் என்று தெரிகிறது
உன் வாழ்வில் வட்டமீச வந்தவள் நான் வாடி கிடக்கிறேன்
இன்னும் கண்ணீரை
எனக்கு நீங்கள் பரிசு அளித்தாளும்
நீங்கள் மட்டுமே
என் உயிர் என்பதை மறக்காதீர்கள்.
No comments: