வறுமை
என்னை வாட்டிய பொழுதுகள்
என் வாழ்வின்
அர்த்தமுள்ள வாழ்க்கையின் படிகள் தான்
அந்த நாட்கள்.
உறவுகளின்
உணர்வுகளின் உச்சத்தை
நான் அந்த நாட்கள் மூலம் அறிந்தேன்.
ஆறுதல்
சொல்ல ஆளும் இல்லை
அரவணைப்பு தர
சொந்தங்களும் இல்லை
என் வாழ்வில்
பட்ட கடன் இந்த
வாழ்க்கையின் நீட்சம்
ஏன்
இந்த வாழ்க்கையை
இறைவன் தந்தான் என்று
இன்றும் கூட
புரிந்துக் கொள்ள என்னால் முடியவில்லை.
காயங்களும்
கோவங்களும்
என்னை மட்டும் சூழ
தாகத்தில் தவிக்கும் காகம் போல்
என் வாழ்வின் துவக்கம்
அமைந்தது ஏன் ?
முன்னோர்
செய்த பவமா?
இன்னோர்
செய்த மோசமா?
உதவி
என்று ஓடிவரும் உறவுகளுக்கு உயிரையே தந்த எனக்கு மட்டும்
ஏன் இந்த நிலை.
காற்றோடு
சுவாசிக்கும் என் மூச்சு காற்றும்
இவ்வுலகில் தனித்தே பயணம் செய்கிறது
என் நிழல் மட்டும்
என் வாழ்வின் நம்பிக்கையாய் என் பின் தொடர்கிறது
பசித்த
வயிறுக்கு என் வறுமை தெரியுமா?
தண்ணீரில் பசி தீரும் அருமை புரியுமா?
பட்டொளி வீசும்
வானம் கூட புது வாழ்வுக்கு அழைக்கிறது.
என் நிம்மதியை தேடி
என் நிழலும் நிற்கிறாய் அலைகிறது
வானத்தில்
நட்சத்திரம் ஜொலிக்கும்
அதில்
நான் வரைந்த ஓவியங்களை மட்டும் மேகம் மறைக்கும்
நிலவு போன்ற
மேடு பள்ளங்கள் கொண்ட இந்த
இப்பிரபஞ்சத்தில்
என் வாழ்வு மட்டும் ஏன் பள்ளம் நோக்கியே ஓடுகிறது.
ஓடிவரும்
மழை நீரும் பள்ளம் நிரப்பும்
அங்கே
தற்காலிக சமத்துவமும் உடனே பிறக்கும்
காணவரும்
சூரியனும் சுட்டெரிக்கும்
கானல்நீராய் உருமாறி மீண்டும் பள்ளம் தெரியும்
மூடுபனி இல்லாத என் வாழ்வு போல
பாவம் மழை நீரும் உருமாறி போனது எங்கே?
யாதும் அறியாத
ஜாது ஆனேன்.
வலிகளை மட்டுமே
சுவாசிக்கும் எனக்கு
புது வாழ்வு துவங்குவது எப்போது
பிரம்மா ?
No comments: