ஏனோ
சில உன்மையான உறவுகள்
இந்த உலகில் பாதியிலே
தன் வாழ்வை முடித்து
இறைவனடி சேர்ந்து விடுகிறது..
ஏன்
பிரம்மன்
இப்படி ஒரு வாழ்வை கொடுத்து
பாதியில் எடுக்கிறான் என்று
இன்றும் புரியவில்லை.
எத்தனையோ
கனவுகளோடு இந்த பூமி பந்தில்
சுத்தி வந்து
உன்மையான அன்பை
உறவுகளுக்கு கொடுத்த
உன்மையான உறவை ஏன்
வாழ்க்கை துவங்கும் முன் எடுத்தாய் இறைவா.
நல்ல ஒரு வழிகாட்டல் உறவு
என் வாழ்வுக்கு என் தங்கை தானே
இறைவா
ஏன் பிரித்தாய்?
என்ன என்ன
ஆசையோடு சுற்றி வந்தால் தெரியுமா?
இந்த உலகில்.
அவள்
கனவு அத்தனையும்
மண் தொண்டி புதைத்து விட்டாயே.
ஏன்
என்னை மட்டும்
அவள் இன்றி தவிக்க விட்டாய் இறைவா?
காற்றோடு கலந்து போன
என் தங்கையின் கண்ணீர்த் துளிகள்
இன்றும் என் இதயத்தில்
ஈரத்தை கக்கியபடி இருக்கிறேதே
இதற்கு
பதில் ஏது இறைவா.
No comments: