கதிரவனுக்கு ஒரு கவிதை
அதிகாலை
சூரியனை அழகாக
வருடி வரும் இதமான
இளந்தென்றலுக்கு இனிய வணக்கம்
இளைப்பாறும்
சோலை யாவும்
வியப்பாய் கண்விழிக்கும்
இளஞ்சூரியனுக்கு இனிய வணக்கம்
பூமிக்கு வந்துவிட்டு
புது நெல்லை பார்த்துவிட்டு
கண் சிமிட்டி போகும்
இளம் கதிரவனுக்கு இனிய வணக்கம்
நீ இல்லாத
சுகம் ஏது இந்த பூமியிலே
நீ இல்லாத
உயிர்கள் ஏது இந்த சோலையிலே
வட்டமாய்
ஓடிவரும் வண்ண வால் நட்சத்திரமே
நீ இல்லாடி
ஏது உயிர்
ஏது உலகம்
ஏது மழை
ஏது சாரல்
ஏது வானம்
ஏது காதல்
... இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்...
நாட்கள் தவறாது
நீ படைத்த உயிர்களை பார்க்க ஓடிவருகிறாய் பார்
அங்கே தான்
உன் தாய்மையின் வாசம் அறிந்தேன்
இருள் சூழ்ந்த
அண்டத்திலே
தன்னை எரித்து
ஒளி வீசும் கதிரவனே
நீயே இவ்வுலகின் முதல் கடவுள்
உன்
தாய்மையின் வரவை மட்டும் நிறுத்தி விடாதே
இருளில் மூழ்கி போய்விடும்
இவ்வுலகம்.
- உங்கள் கவிஞன்
No comments: