மனம் மயக்கும் மனைவியும் அவள் அன்பின் அணைவில் அழகிய உறவு


அன்பு
மனைவியே 
என் அருகில் வா..

என் ஆதங்கம் 
யாவும் உன்னிடம் 
கொட்டி தீர்த்து
வெப்பத்தின் சலனத்தில் 
சுரக்கும் வேர்வையெனும் 
குலத்தில் குளிக்க வேண்டும்
உன் கூந்தல் கொண்டு 
என் தலை துவட்ட வேண்டும்.

பாற்கடல் 
போல் ஜொலிக்கும் 
என் வாழ்வின் உயிர்மூச்சே
உன்னை ஒரு நொடி பிரிந்தால்
என் உள்ளத்தில் ஏது இயக்கம் 

நான் 
ஆசையாய் கட்டி அணைக்க நீயும்
நான் 
அள்ளிப்பருக உன் அழகு கண்ணமும் 
நித்தம் எனக்கான போதையடி..

உன் 
மெய் சிலிர்த்த தேகமும் 
உன் 
மையிட்ட கண்ணழகும் 
உன் 
கூர்மையான கூந்தலும் 
என் வாழ்வின் 
பொக்கிஷம்.

அன்பே 
ஆயிரம் உறவுகள் 
தராத இன்பத்தையும்
பிரதி பலன் 
பார்க்காத உன் பாசத்தையும் 
பருவம் வந்த பட்டுநூலில் 
பதிக்க வேண்டும் 
காலம் கடந்தும் 
காக்க வேண்டும்.

தளிரே
தாகம் 
கொண்ட தேகத்திற்கு 
தீக்குச்சி தேவையில்லை 
காதல் 
கொண்ட என்  இதயத்திற்கு 
நீ இன்றி வேறு ஒன்றும் தேவையில்லை.


வண்ணமான ஒளிகள் 
யாவும் வாழ்வில் வாடகைக்கு
வந்து போகும் 
வண்ணக் குயிலே
நீ மட்டும் என் வாழ்வில் 
வந்த நிரந்தர ஒளி.

அனையாத தீக்கதிராய்
என் உள்ளத்தில் சுடர் விட்டு 
எரியும் மனைவி யென்னும் மத்தாப்பு ஓளியே 

என் வாழ்வின் 
வெளிச்சத்திற்கு
உன்னையும் அழைக்கிறேன்
வா என்னருகில்.








No comments:

Powered by Blogger.