பள்ளி தோழி பின்னாளில் ஏன் காதலியானால்?

பள்ளி தோழி பின்னாளில் ஏன் காதலியானால்?

என் அருமை சொந்தங்களுக்கு இனிப்பான வணக்கம் 

கவிதையின் அறிமுகம் 

இந்த கவிதை தோழியின் அழகை பிரதிபலிப்பது, அவளின் நட்பை கடந்து எப்படி காதல் பிறந்தது வளர்ந்தது என்பதன் விளைவுகளை வரிகள் மூலம் நடத்துவதே இந்த கவிதையின் சாரல் வாருங்கள் உறவுகளே கவிதை சாரலில் நனைவோம்.

கவிதை 


யாரும் 
அரியாத உலகம் இது
அதில் 
என் தோழியும் நானும் மட்டும் 
எப்போதும் 
மெளனம் மட்டும் 
எங்களிடம் பிறக்கவே இல்லை 
எப்போதும் ஏதாவது 
உரையாடிக்கொண்டே இருப்போம் 

எங்கும் 
பச்சை இலைகள் 
பந்தல் விரித்து 
பசுமை சோலை பூத்து குலுங்கும் 
அழகிய பள்ளி எங்களுடையது

அழகாய் 
வலைந்து ஓடும் நதிகளும் 
அதன் அருகே 
கம்பீரமான ஆலமரமும் 
எனக்கும் என் தோழிக்கும் 
சொந்த வீடு.

ஆம் 
அங்கே தான் 
நானும் அவளும் 
அன்பையும் பாசத்தையும் 
அமர்ந்து பேசி பரிமாற்றம் செய்வோம் 

எங்கள் 
முதுமைக்கு ஏற்ற நினைவுகள் 
அந்த ஆலமரத்தில் தான் 
சேமிக்கப்பட்டது 

காலங்கள் ஓடின 
மாற்றங்கள் புகுந்தன 
ஏற்ற இறக்கங்கள் கொண்ட 
வாழ்க்கை அமைந்தது 
துயரங்கள் படிந்த
வாழ்க்கை சொல்லி ஆறுதல் அடைய 
தோள்கள் தேடினேன் 
மீண்டும் என் தோழி கிடைத்தால்.

ஒன்றும் 
இல்லாத வாழ்க்கை இது
ஏன் உன்னை வதைத்து கொண்டு வாழ்கிறாய் என்று தோழி வினவ 
என்ன சொல்வது என்று தெரியவில்லை 
என் கண்ணீரை மட்டும் 
அவளுக்கு பரிசு அளித்தேன் 

சட்டென்று 
அவள் கைவிரல் 
என் விழிகளில் துடுப்பாக மாறி
என் கண்ணீரை துடைத்து 
என் வாழ்வின் மறு தாயாய் 
என் தோழி நின்றால்.

ஆலமரமும் 
அங்கே வீசும் தென்றலும் 
அள்ளி வைத்து 
கட்டிய கோயில் 
எங்கள் பாசம் 
அந்தக் கடவுள் சிலையாக
என் தோழி.

ஆயிரம் 
உறவுகளின் 
முக்கியமான ஒரு உறவு தோழி 

தோழியாக 
என் வாழ்வில் என்னோடு 
பயணம் செய்தவள் 
என் வாழ்வின் தோல்விகளை 
நேரில் கண்டு 
அவளே என் காதலியானால்

அவள் 
மட்டும் இல்லை என்றால் 
என் வாழ்வின் 
அர்த்தம் இன்று வரை நான் 
புரிந்துக் கொள்ள 
தெரியாமல் தடுமாறி 
தடம் மாறி போய் இருப்பேன்.


முடிவுரை:


சிறந்த நண்பர்கள் மூலம் மட்டுமே உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை கடந்த முடியும்.

இனைந்து இருங்கள் இன்பம் தரும் இனிய நண்பர்கள் உடன்.






No comments:

Powered by Blogger.