தமிழ் காதல் கவிதைகள்

தமிழ் காதல் கவிதைகள்
Header Image

முகப்பு

என் அன்பார்ந்த உறவுகளே உங்களுக்கு என் தமிழ் வணக்கம், நீங்கள் கவிதைகள் மீது காதல் கொண்டு இந்த தளத்தில் பயணம் செய்வது என் போன்ற கவிஞனுக்கு நீங்கள் தரும் உணர்ச்சிகளின் உச்சம் , நன்றி உறவுகளே, வாருங்கள் கவிதைகள் பற்றிய தகவல்களை காண்போம்.

இளமை தீ

தரிசு நிலத்தில் தண்ணீர் பீச்ச வருவாயா,
தவித்து நிற்கும் பெண்மைக்குள் மகிழ்ச்சி மீட்ட வருவாயா,

ஓசையின்றி உள்ளே தவிக்கும் உணர்வுகளின் உயிரை மீட்க வருவாயா,
இளமையில் எரியும் தீயை இழுத்து அணைக்க வருவாயா?

- கவிஞர் சிவா
காதல் பழரசம்

ஒத்தையில பழத்து நிற்கும் மாம்பழத்தை எப்போ தான் அணில் வந்து கடிக்குமோ

அது கடித்து விட்டு மிச்ச விட்ட பழமும் எப்போ தான் பழரசமாய் மாறுமோ?

காதல் வந்து காம்பு கிட்ட காத்து கிடக்குது

பழுத்த பழம் அணில் வருகைக்காக காத்துகிடக்குது.

- கவிஞர் சிவா
அழகியல் ஓவியம்

தென்றலே சற்று வேகமாக வீசு தென்கிழக்கில் இருந்து ஒரு தேவதை வருகிறாள்
அவள் அசைந்து வரும் அழகை கண்டு ஓவியங்கள் வெட்கத்தில் நிற்கிறது

- கவிஞர் சிவா
காதல் சுகம்

அங்கே
ஓடிவரும் அவள் அழகில் ஆயிரம் அலைகள்
மெல்ல நகர்ந்து என் மீது மோகத்தை பீச்சுகிறது இது முறைதானா?

- கவிஞர் சிவா
காதல் தீண்டல்

தூரல் சுகம் அறியாத பாலைவனம் முதல் முறையாக ஈரத்தின் சுவையை சுவாசிக்கின்றது அவள் விரல் கொண்டு பாலைவனத்தை தீண்டிய பொழுது.

- கவிஞர் சிவா
அவள் தீண்டல்

கட்டழகு
தேகத்திற்கு அழகு மீட்டும் சேலையை பார்
அவள் அழகை அவளுக்கு தெரியாமல் அது தீண்டும் சுகத்தைப்பார்
ஓவியங்கள் போல அவள் நிற்க அவள் மேல் வண்ணம் மீட்டும் அழகு தென்றலைப்பார்
இயற்கையின் படைப்பில் அழகியல் அவள்
அவள் மெல்ல சிரித்தாள் இந்த பூமிக்கூட முத்தாய் ஜொலிக்கும் அந்த பூமிக்கூட அவளுக்காக தவியாய் தவிக்கும்

- கவிஞர் சிவா
அவள் நதியா

ஓடியது நதியா இல்லை நீயா வலைந்து ஓடும் அந்த நதிப்போல் உந்தன் கூந்தல் அழகு காற்றில் ஓடுகிறதே

- கவிஞர் சிவா
அவள் நினைவுகள்

அன்புடன்
அவளும் ஆசையுடன் நானும்
அந்த நதிக்கரையில் பேசிய சுகம் இன்றும் என் நெஞ்சோரம் இனிப்பை சுரக்கிறது
ஏனோ அவள் என்னை மறந்து போனால் ஆனால் அவள் மீதான காதல் நினைவுகள் மட்டும்
அந்த நதிப்போல அவளை தேடி ஓடுகிறது

- கவிஞர் சிவா
காதல் பேரழகு

காதலித்து பாருங்கள் அந்த காதல் சுகம் இந்தப் பிரபஞ்சத்தின் பேரழகு

- கவிஞர் சிவா
அவள் அன்பின் பிச்சை

ஏனோ அவளிடம் மட்டும் என் இதயம் நித்தமும் அவள் அன்பை பிச்சை கேட்டு நிற்கிறது

- கவிஞர் சிவா
அவள் தீண்டல்

இனம் புரியாத சுகம் அவள் சினுங்கள் சத்தத்தில் நித்தம் பிறக்கிறது அது என்னை சித்தம் கொள்கிறது

- கவிஞர் சிவா
அவள் தீண்டல்

முதல் நாள் சந்திப்பில் அவள் விரல் தீண்ட நான் பட்ட நடுக்கம் கூட ஊடலின் முதல் ஆரம்பம்.

- கவிஞர் சிவா

முடிவுரை

நன்றி, எங்கள் வலைத்தளத்தில் சிறந்த கவிதைகள் உங்களுக்கு சிறப்பான உணர்வுகளை பகிர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

No comments:

Powered by Blogger.