சோலையில் காதல் சத்தம் - ஒரு வெட்கத்துடன் பயணம்
முன்னுரை:
காதலின் பசுமைசூழ்ந்த பாதையில் நிகழும் பயணம் இங்கே நம்மை அழைக்கின்றது. காதலின் தெய்வீக உணர்வுகள், இயற்கையின் அழகோடு இணைந்தபோது எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதற்கான சுவடுகள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன.
கவிதை:
முன்னே நீ அமர
பின்னே நான் அமர்ந்து
பயணம் செய்த சோலையடி
எங்கும் பச்சை நிற காட்சியடி.
தென்றலுக்கும்
சோலை மீது காதல் தான்;
எனக்கும்
உன் சேலை மீது காதல் தான்.
மஞ்சள் கமகமக்க
பன்னீர் பூ வாசம் வீச,
தகதகவென மின்னும் கண்ணாடி மாளிகை போல் நீ சேலை உடுத்தினால்
நான் மயங்காமல் என்ன செய்வேன்?
பட்டொளி வீசும் தேகமும்
பன்னீர் பூ போன்ற இதழ்களும்,
பிறை போல் மினுக்கும் இமைகளும்,
செழித்து வளர்ந்த காடுகள் போன்ற கூந்தலும்
என் உள்ளத்தில் தூண்டில் போட்டு பார்க்குது,
என் நெஞ்சத்தில் காதல் தீயை ஏற்றுது.
காதல் தீயை
பற்ற வைத்த பெரும் நெருப்பே,
உன் அங்கத்தின் சூட்டை தணிக்கும்
தங்கத்தின் தண்ணீரை ஏனடி
சுரக்க செய்கிறாய்?
யாரும் அற்ற சோலை என்பதால்
சேலை படுத்தும் பாடா இது.
உணர்வுகளின் மத்தியிலே ஊடுருவி
உணர்ச்சிகளின் உச்சத்தில் உன் காதல் காகிதத்தை நீட்டலாமா?
அன்பே,
முதல் முறையாக உன்னோடு பயணம் இந்த மிதிவண்டியில்,
ஏனோ தெரியவில்லை
இவ்வுலகில் நானே மகிழ்ச்சியில் பிறந்த பிள்ளை போல்
முதல் முறையாக உணர்கிறேன்.
காதல்
சுகம் என்று அறிவேன்,
ஆனால்
இவ்வளவு சுகம் இருக்கும்னு இவ்வளவு நாள் தெரியலையே.
முதல் முறையாக உன்னோடு நான் உறவாட காத்திருந்த இந்த தருணத்தில்,
சோலை கூட வெட்கத்துடன் கண் மூடும் அழகை பார்;
அதன் மீது
ஈரக்காற்றை அள்ளி வந்து தெளிக்கும்
தென்றலை பார்.
என்னவளே,
பூக்க தவிக்கும் மொட்டுக்கள் போல
என் மனதில் காதல் தவிக்கிறது.
இனியும் காலம் தாழ்த்தி நம் காதல் தீயை ஏற்றலாமா?
வா,
இந்த வசந்த சோலையில்
நம் வாழ்வை தொடங்கலாம்
அந்த சிட்டுக்குருவிகள் போல.
முடிவுரை
இந்த காதல் பயணத்தின் ஒவ்வொரு அடியும் நம் மனதை தழுவிக் கொண்டிருக்கிறது. காதலின் உணர்வுகள் நம்மை மிகப்பெரும் மகிழ்ச்சியுடன் நிரப்புகின்றன. இவ்வுலகில் காதல் மட்டுமே ஒருவரின் வாழ்வில் நம் உள்ளத்தினை கொண்டாடவைக்கும்.
No comments: