
முகப்பு
என் அன்பான உறவுகளே உங்கள் வருகையை அன்புடன் வரவேற்கிறது இந்த வலைத்தளம் , இந்த பதிவில் அழகிய தமிழ் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பை பதிவு செய்து உள்ளோம் வாருங்கள் காண்போம்.
Table of Contents
ஆயிரம் வலிகளை அனுதினமும் தாங்கும் அதிசய இதயம்.

எத்தனை கவலை உள்ளத்தில் மிதந்தது அத்தனையும் இன்று என்னுள் மனநோய்யாய் தவிக்குது.
இந்த பிரபஞ்சத்தில் எனக்காய் பூத்த உறவு நீ தான்.
என் வாழ்வு முழுமை பெற என் நிழாய் என்னோடு வருபவள் நீயே.
ஒத்த நிலவு போல் ஜொலிப்ப சித்தம் கலைவது போல் சிரிப்பாள் மொத்தத்தில் அவள் அழகு மோகினி .
ஏனோ எனக்காய் அவள் பார்த்து பார்த்து செய்யும் உணவுகள் என்றும் அமிர்தம் தான்.
காசு பணம் கையில் இல்லை ஆனால் என்றும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லை.
ஆயிரம் உணர்வை சத்தம்மின்றி பிரிக்கும் என் இதயத்தின் மெளன வெளிப்பாடு என் காதல்
தவறாக புரிந்து கொள்ள துணிந்த போது யுத்தம் நித்தம் வெடிக்கிறது.
ஆயிரம் பேர் என்னைப்போல் இருக்காலம் ஆனால் அவளுக்கு என்றும் அரசன் நான் தான்.
என்னை வசியம் செய்யும் பார்வை உன்னிடம் மட்டுமே உள்ளது என் உயிரே.
என் இதயத்தின் இளவரசி அவள் தான் .
நான் கிறுக்கிய எழுத்துக்கள் யாவும் அவளே முதன்மை காதலி.
ஆயிரம் ஓவியங்கள் அதில் அவள் மட்டுமே காவியம் அவள் இல்லாமல் என் கவிதைகள் இல்லை.
மெய் சிலிர்க்க நின்றேன் அவள் கண் அழகை பார்த்ததும்.
ஒருமுறை கூட அவள் ஏக்கம் என் உள்ளத்தில் இல்லாமல் இல்லை.
உச்சி உசுப்பி தவளும் காற்று நித்தமும் ஒளிரும் அன்பின் அழகி அவளே என் காதல் மனைவி.
கருப்பட்டி போல இனிக்கும் அவள் பார்வை நெருப்பாய் என்னுள் நேசத்தை தூண்டிவிடும்.
மத்தாப்பு போல ஜொலிக்கும் சித்தாரகள்ளி உன் புன்னகை பூக்கும் பூக்களடி அள்ளி ராணியை அன்பாய் வருடும் அழகு கவிதையடி.
ஓசையோடு மெல்ல நகரும் என் காதல் கனவே மீண்டும் நாளை வா.
ஆயிரம் வலிகள் இருந்தாலும் உன் மடியே என் நிம்மதியின் தாய் வீடு.
தெப்ப குளத்தில் பூத்து நிற்கும் வெண் காந்தள் மலரை போல என் மனசுக்குள் பூத்து நிற்கும் அழகி .

ஓசை இல்லாமல் கீர்த்தனை பாடும் இனியவளே சந்தம் தவிக்கிறது மீண்டும் மீட்டு.
எனது வாழ்வில் ஏதும் இல்லாத பொழுது வெறுமை மட்டும் நிரந்தரம் ஆனது.
இறைவனின் படைப்பில் குழந்தைகள் அழகு.
ஒத்தை வரி வார்த்தைகள் எல்லாம் வலிகள் சுமந்து ஹைக்கூ ஆகியது.
வத்தி கிடக்கும் என் வரண்ட மனசுக்குள் அவள் வருகையே மழைநீர் ஆனது.
வலிகளின் பிரிதி நான் என் வாழ்வில் மகிழ்ச்சி என்பதை நுகரவே இல்லை
இருக்கும் இடம் தெரியாது அதன் உள்ளே இருக்கும் வலிகள் மட்டும் முகம் அறியும்.
வெற்றிடம் கூட வீழ்ச்சி பெறும் ஒளியின் முன்னால்.
கோவலன் மனதில் காதலை தூண்டியவள் என்பது வரலாறு
கைகோர்த்து நடக்க மனம் முதலில் வந்தால் அதன் பின்னர் பாசம் படையெடுக்கும்.
அனைவருக்கும் ஆற்றல் என்பது ஒன்று தான் அதை நீ அறிவதில் திறமை ஒழிந்து கிடக்கிறது.
உன் வேலையை செய்து கொண்டு இரு உன் புகழ் வையகம் பாடும் .
ஓடி ஓடி உழைத்த பின்பு ஓய்வு ஓவியம் தீட்டுகிறது ஓவ்வொரு மனிதன் மனதிலும்.
புன்னகை நித்தமும் பூக்கட்டும் பூஞ்சோலை நித்தமும் பூச்சூடி மகிழட்டும்.
உறவையும் மனதையும் இனைக்கும் ஓவியம் இனிப்பு.
உன்னத உறவு அப்பா அவர் சாயல் தான் நான்
இரக்க குணம் உன்னிடம் இருந்தால் உன் குணம் காற்றில் தீய்யாய் பரவும்.
மெளனமாக நகர்ந்து செல்லும் வாழ்வின் அதிசயம் ஒரு பெண்ணின் பொட்டு.
கண்கள் மூலம் மின்சாரம் பீச்சும் இனியவளே உந்தன் ஈர்ப்பு நான் உணர்ந்தேன்
என் மனசுக்குள்ள நிம்மதியாய் வாழ்பவள் நீ உன் காதல் ரவுசு உள்ளத்தில் ராணியாய் உருவக படுத்துகிறது
துணிந்து நில் பிறகு உன் முன்னே உன் வெற்றியை தவிர வேறு ஒன்றும் நிற்காது.
சொக்கி கிடக்கும் பூக்கள் யாவும் புன்னகை பூக்கிறது என் எதிர் வீட்டு மல்லிகாவை போல்.
இரு மனதின் உடன்படிக்கை .
தளீராய் துடிக்க காதல் உணர்வை தீண்டிய பிறகுதான் தெரிந்தது பாசம் தான் காதல் என்று.
என் உள்ளத்தில் பூத்த ஒத்தை காதல் பூ .
காத்து இருக்கிறேன் உன் கைபிடிக்க
தேன் சுவையை விட தூய்மையானது அவள் பேச்சு.
என் உள்ளத்தின் மகாராணி
எனக்காய் பிறந்தவள் என் உயிரில் கலந்தவள்.
யார் செய்தது புண்ணியம் தெரியவில்லை எங்கள் வாழ்க்கை எந்த சலனமும் இல்லாமல் அந்த நதிப்போல் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
முடிவுரை
நன்றி, எங்கள் வலைத்தளத்தில் சிறந்த கவிதைகள் உங்களுக்கு சிறப்பான உணர்வுகளை பகிர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன், உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்,இந்த உதவியை எங்களுக்காக செய்யுங்கள்.
No comments: