அப்பா ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு:
முன்னுரை:
அப்பா என்றால் என்ன? அன்பும், அரவணைப்பும், பாதுகாப்பும், உயர்வும், பெருமையும் என்று எதையும் சேர்த்துச் சொல்லலாம். அப்பா ஒரு புது பூமி, ஒரு புதிய உலகம். மந்திர மூன்று எழுத்துகளில் அடங்கிய 'அப்பா' என்ற சொல் மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. அவர் அர்த்தம் கொண்ட கம்பீரம், உழைப்பு, கொடுப்புணர்வு போன்ற எண்ணற்ற விஷயங்களையும் உள்ளடக்குகிறது. இங்கு நான் எனது அப்பாவைப் பற்றி சில அழகான கவிதைகளையும், அவரின் குணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். என் அப்பா, மீசைக்காரர்; மூன்று எழுத்து மந்திரத்தை மறைத்து வைத்து என் கண்ணத்தில் முத்தமிட்டவர். வெள்ளை வேட்டி, கம்பீர நடையுடன் கருணை உள்ளத்தோடு எங்கள் காவல்காரராக இருந்தவர். இவை அனைத்தும் அப்பாவின் வீரத்தை, குணத்தை, அன்பை வெளிப்படுத்துகின்றன. அப்பாவின் வருகைக்காக சோலைகள் காத்திருக்கும், சேனைகள் காத்திருக்கும் என என் அப்பாவுக்கு காத்திருக்கும் உலகம். கூட்டமும், கூர்ந்து பார்க்கும் கண்ணுகளும், அப்பாவின் அறிவை கண்டுபிடிக்க விரும்புகின்றன. வள்ளுவரையும், கம்பனையும் துணையாக அழைத்து, மக்களின் மத்தியில் கதை சொல்லும் எங்கள் முன்னேற்றியின் மேல் எனக்கு பெருமை.
அப்பா பற்றிய கவிதைகள்
மீசைக்காரர் கவிதை
"மூன்று எழுத்து மந்திரத்தை மறைத்து வைத்து என் கண்ணத்தில் முத்தமிட்ட மீசைக்காரர் என் அப்பா "_கவிஞர்சிவா
காவல்காரர் கவிதை
"வெள்ளை வேட்டியும் கம்பீர நடையும் கருனை உள்ளம் கொண்ட எங்கள் காவல் காரர் என் அப்பா "_கவிஞர்சிவா
அப்பா வருகை கவிதை
"சோலை காத்தும் நிற்கும் என் அப்பாவின் வருகைக்காக சேனையும் காத்து நிற்கும் என் அப்பாவின் வருகைக்காக. "_கவிஞர்சிவா
அப்பாவின் அறிவு கவிதை
"கூட்டமும் கூர்ந்து பார்க்கும் என் அப்பாவின் கம்பீரமான அறிவை இரு கண்ணும் காத்து கிடக்கும் அக்காட்சியை காண. "_கவிஞர்சிவா
முன்னேற்றி ஏர் கவிதை
"வள்ளுவரை துணைக்கு அழைத்து கம்பனின் கவிதையை துளிப்பா எடுத்து மக்கள் கூட்டம் முன் கதைச் சொல்லும் எங்கள் முன்னேற்றி ஏர் என் அப்பா.. "_கவிஞர்சிவா
பூக்களின் புன்னகை கவிதை
"பூக்கள் கூட புன்னகைக்கும் என் அப்பா வின் முகத்தை கண்டதும்.என் அப்பா இவ்வுலகில் எனக்கு அதிசயம்.."_கவிஞர்சிவா
அப்பாவின் உறவு கவிதை
"ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா போல் வருமா? எனக்கு என் அப்பா போதும்.. "_கவிஞர்சிவா
வீரத்தின் அசல் கவிதை
"வெள்ளை வேட்டியில் மல்லிகை பூ போல ஜொலிக்கும் என் வீரத்தின் அசல் என் அப்பா. .."_கவிஞர்சிவா
ஏக்கம் கவிதை
"வாழ்வில் வசந்தம் பூக்கும் என்ற ஏக்கத்துடன் வாழ்ந்த மனிதன் கடைசி வரை வசந்தத்தை பார்க்காமலே மறைந்து விட்டார் . "_கவிஞர்சிவா
உன்னத உறவு கவிதை
"கல்லூரி நாட்களில் என் தோழன் போல் நல்லவை போதித்த உன்னத உறவு என் அப்பா."_கவிஞர்சிவா
போராட்டம் கவிதை
"வெற்றியோ தோல்வியோ நித்தமும் போராடு சொல்லி கொடுத்தவர் என் அப்பா. "_கவிஞர்சிவா
அசல் கவிதை
"தினமும் தேடுகிறேன் என் உருவத்தின் அசலை இப்பிரபஞ்சத்தில்.. "_கவிஞர்சிவா
ஆறுதல் கவிதை
"ஆயிரம் வலிகள் இருந்தாலும் ஆறுதல் கூறி என்னை தேற்றுவது என் அப்பா."_கவிஞர்சிவா
உழைப்பு கவிதை
"உச்சி வெயில் அடிக்கும் ஓடிவரும் நீரும் சுட்டுரெகிக்கும் ரெட்டை மாடு உழவ பூட்டி உடம்பு எல்லாம் உப்பு பூக்கும் அழையா விருந்தாளியாய் வியர்வை நீர் இரத்தமாய் வடிந்து தொலையும் குடும்பத்தில் மொத்த உயிர் பட்டினியை நினைத்து இங்கே நிலத்தில் ஒத்த உயிர் செத்து மடியும் ."_கவிஞர்சிவா
வைரம் கவிதை
"அப்பாவின் உழைப்புக்கு நிகர் ஏதும் உண்டோ நித்தம் அவர் படும் பாடு வையகம் அறிந்தது உண்டோ வத்தி போன வயிரோட வாடிப்போன முகத்தோடு கிழக்கு சூரியன் பூக்கும் முன்னே புறப்பட்டு கழனியில் கால் பதித்து விவசாயம் பன்னும் ஏழ்மை குடும்பத்தின் வைரம் என் அப்பா.. "_கவிஞர்சிவா
ஏக்கம் கவிதை
"அப்பாவின் இழப்பு இன்னும் என்னுள் ஏக்கத்தின் நீட்சியாய் என்னுள் எரிந்து கொண்டு இருக்கிறது. "_கவிஞர்சிவா
அப்பாவின் ஆசை கவிதை
"எழுத படிக்க தெரியாத என் தந்தையின் ஆசையெல்லாம் நான் நன்றாக படிக்க வேண்டும் என்பது மட்டுமே"_கவிஞர்சிவா
கண்டிப்பு கவிதை
"என்னை நேர் வழியில் பயணிக்க என் அப்பாவின் கண்டிப்பே ஒரு காரணம். "_கவிஞர்சிவா
வெறி கவிதை
"என் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதே எந்தன் வெறி"_கவிஞர்சிவா
அசையும் ஓவியம் கவிதை
"மென்மையான பேச்சும் மேனி சிலிர்க்க வைக்கும் பாசமும் அசையும் ஓவியமாய் நித்தமும் கொடுத்தவர் என் அப்பா."_கவிஞர்சிவா
வேர் கவிதை
"எங்கள் குடும்பத்தின் ஆணி வேர் என் அப்பா"_கவிஞர்சிவா
பஞ்சாயத்து கவிதை
"தீர்க்க முடியாத பகையை ஒரு நொடியில் தீர்க்கும் ஆற்றல் கொண்டவர் அப்பா. "_கவிஞர்சிவா
குழந்தை மனசு கவிதை
"ஏனோ அப்பா இன்றும் குழந்தையை போல் மனசை வெண்மையாக வைத்துக்கொண்டு இருக்கிறார்"_கவிஞர்சிவா
வலிகள் கவிதை
"ஆயிரம் வலிகள் உள் மனதில் இருந்தாலும் வெளியில் அப்பா காட்டிக்கொண்டே இல்லை"_கவிஞர்சிவா
இனிப்பு கவிதை
"அப்பாவின் பேச்சு நித்தமும் இனிக்கும் சக்கரை கட்டி"_கவிஞர்சிவா
ஆளுமை கவிதை
"அப்பாவின் அன்பே என் ஆளுமையின் மந்திரம்"_கவிஞர்சிவா
சுவர் கவிதை
"விரிசல் விட்ட சுவரும் ஏங்கியது மீண்டும் இனைய"_கவிஞர்சிவா
உந்துதல் கவிதை
"ஓவ்வொரு மகனுக்கும் அவன் தந்தையே முதல் மற்றும் கடைசி உந்துதல்"_கவிஞர்சிவா
அப்பா கவிதை
"அப்பா என் உயிரினும் மேலான உன்னத உறவு"_கவிஞர்சிவா
இலக்கு கவிதை
"அப்பாவின் இலக்கு நான் இன்ஜினியர் ஆக வேண்டும்"_கவிஞர்சிவா
மெளனம் கவிதை
"ரோசாப்பூ இதழ் மென்மையை விட மெளனம் ஆனது என் அப்பாவின் மனம்"_கவிஞர்சிவா
முயற்சி கவிதை
"நித்தமும் ஊக்கத்தை கொடுத்து கொண்டே இருப்பார் அப்பா வெற்றி பெறும் இலக்கை தொட முயற்சி என்று"_கவிஞர்சிவா
இலக்கண கவிதை
"என் அப்பாவை போன்று நான் வாழ வேண்டும் "_கவிஞர்சிவா
சோர்வு கவிதை
"சோர்வை ஓரம் கட்டி சோற்றுக்காக உழைத்திட்டார் என் அப்பா "_கவிஞர்சிவா
பயணம் கவிதை
"என் நினைவில் நித்தமும் பூக்கிறது என் அப்பா நான் செய்த பயணம்"_கவிஞர்சிவா
அழகு கவிதை
"இந்த உலகில் பேரழகன் என் தந்தையே"_கவிஞர்சிவா
நிகழ்வு கவிதை
"சில நிகழ்வுகளில் என் தந்தை இல்லாது தவிக்கிறேன்"_கவிஞர்சிவா
வறுமை கவிதை
"வறுமையிலும் என் தந்தையின் புன்னகை பூக்க மறுத்தது இல்லை"_கவிஞர்சிவா
பாடல் கவிதை
"எங்கள் வீட்டில் நித்தமும் என் தந்தையின் பாடல் ஒலிக்கிறது"_கவிஞர்சிவா
உறுதி கவிதை
"கையில் ஒரு ரூபாய் இல்லாத போதும் என் அப்பாவின் நெஞ்சில் உறுதி இல்லாமல் இல்லை"_கவிஞர்சிவா
இளமை கவிதை
"என் தந்தையின் இளமை வறுமையை கதையாக நான் கேட்ட பிறகு என் வாழ்வின் பயணத்தை மாற்றி அமைத்தேன்"_கவிஞர்சிவா
தூரம் கவிதை
"இளம் வயதில் தூரமாக வந்து விட்டேன் கல்விக்கா என் தந்தையை விட்டு"_கவிஞர்சிவா
சுகம் கவிதை
"என் அப்பாவின் மடியே நான் சுகம் பெறும் சாசனம் "_கவிஞர்சிவா
உதவி கவிதை
"ஊட்டி வளர்த்த தாயையும் தந்தையையும் வாழ்வில் போற்றிக் கொண்டே இருங்கள்"_கவிஞர்சிவா
அனுபவம் கவிதை
"என் அப்பாவின் வாழ்வே என் அனுபவம்"_கவிஞர்சிவா
வெற்றிக்கான பொன்மொழிகள்
தன்னம்பிக்கை வெல்லும்
"எதிலும் முழுமையாக போராட கற்றுக்கொள்" _கவிஞர்சிவா
உங்களை நம்புங்கள்
"உங்களால் முடியாதது இவ்வுலகில் ஏதும் இல்லை." – கவிஞர்சிவா
- தமிழ் ஹைக்கூ கவிதைகள்
- தமிழ் வாழ்வியல் கவிதைகள்
- தமிழ் இளமை கவிதைகள்
- தமிழ் ஹைக்கூ இளமை கவிதைகள்
- தமிழ் மோட்டிவேஷன் கவிதைகள்
- தமிழ் தன்னம்பிக்கை கவிதைகள்
- சோழநாட்டு கவிஞரின் கவிதைகள்
உழைப்பு
"காலம் கொடுத்த கொடை நித்தமும் உழைத்து பாருங்கள்." _கவிஞர்சிவா
தேவை கவிதை
"தேவைக்காக மட்டுமே எதையும் சேருங்கள் "_கவிஞர்சிவா
தோல்வி கவிதை
"தோல்வியை ரசிக்க கற்றுக் கொள்"_கவிஞர்சிவா
வாழ்க்கை கவிதை
"எப்போது எதை கொடுக்கும் என்று தெரியாது"_கவிஞர்சிவா
முயற்சி கவிதை
"முயற்சி மட்டுமே வாழ்வில் வசந்தத்தை தரும்"_கவிஞர்சிவா
பார்வை கவிதை
"நீ பார்க்கும் பார்வை தான் பலரின் உபசரிப்பு மறைந்து இருக்கிறது"_கவிஞர்சிவா
அப்பா கவிதை
"நினைவுகள் எல்லாம் நினைவாக"_கவிஞர்சிவா
டோர் கவிதை
"தந்தையின் உழைப்பை சுமந்து நிற்கிறது எங்கள் வீட்டின் டோர்"_கவிஞர்சிவா
இதயம் கவிதை
"என் தந்தையின் துடிப்பு என்னுள் துடிக்கிறது"_கவிஞர்சிவா
தூரல் கவிதை
"தூரல் யாவும் என் தந்தையின் தலை துவட்டி விடும் நினைவை பரிசு அளிக்கிறது"_கவிஞர்சிவா
முடிவு
என் அப்பாவின் முகத்தை கண்டதும் பூக்கள் கூட புன்னகைக்கும். என் அப்பா எனக்கு ஒரு அதிசயம். ஆயிரம் உறவுகள் இருந்தாலும், அப்பா போன்றவர் வருமா? என் அப்பா போதும் எனக்கு. வெள்ளை வேட்டியில் மல்லிகை பூ போல ஜொலிக்கும் என் அப்பாவின் வீரத்தைப் போல் மற்றவர் இல்லை. வசந்தம் பூக்கும் என்ற ஏக்கத்துடன் வாழ்ந்த என் அப்பா, கடைசி வரை வசந்தத்தை பார்க்காமலே மறைந்தார். கல்லூரி நாட்களில் என் தோழனாக இருந்து நல்லவைகளை போதித்த உன்னத உறவு என் அப்பா. வெற்றியோ, தோல்வியோ, என் அப்பா எப்போதும் போராட்டத்தை என்னுடன் பகிர்ந்து கொடுத்தார். தினமும் தேடுகிறேன் என் உருவத்தின் அசலை இப்பிரபஞ்சத்தில். ஆயிரம் வலிகள் இருந்தாலும், என் அப்பா ஆறுதல் கூறி என்னை தேற்றுவார். உச்சி வெயில் அடிக்கும் போது, உழவுக்கு உழைக்கும் என் அப்பா. அவரது உழைப்புக்கு நிகர் ஏதும் இல்லை. அவருடைய படும் பாடு, நம் வையகம் அறியுமா? அவரது உழைப்பின் வயரம், ஏழ்மை குடும்பத்தின் வைரம் எனும் என் அப்பா. அவரின் தியாகமும், உழைப்பும், அன்பும், எங்களுக்கு என்றும் வழிகாட்டும். எனவே, எங்கள் அப்பாவை நினைத்து வாழ்வது, அவரின் குணங்களை போற்றி பெருமையோடு வாழ்வது எங்கள் கடமை.
.
No comments: