ஹைக்கூ கவிதைகள் || Tamil Haiku kavithaigal

Haiku Poems by Admin_Siva | Tamil Quotes Blog tamilquotes - Home

tamilquotes

ஹைக்கூ கவிதைகள்

Introduction:

தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் ஹைக்கூ தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.tamilquotes.blog வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :

Admin_Siva
July 6, 2024

பரிசலில் பயணம் பல முறை முயற்சித்தும் தீண்ட முடியாதா நிலவின் ஓவியத்தை தன்னுள் ஒழித்து வைத்த கடலே சற்று சம்மதம் கூறு பிரம்மன் படைப்பை நான் பரிசலில் ருசித்து விடுகிறேன்
- கவிஞர் சிவா

தலைப்பு: பரிசல் ஊடல் கவிதை

இனிப்பான ரசத்தை நித்தமும் ஒளிரும் மினுக்கட்டாம் பூச்சியே உன் புன்னகை இனிப்பு ரசம் இனிப்பா புளிப்பா துவர்ப்பா ஒருமுறை நான் ருசித்து பார்க்கலாமா ?
- கவிஞர் சிவா

தலைப்பு: இதழ் ரசம் கவிதை

நான் அவள் இயற்கை முத்தான சிந்தனைகள் முடிவு பெறாத பயணங்கள் தொடர்கிறது இயற்கையின் அணைப்பில்.
- கவிஞர் சிவா

தலைப்பு: பயணம் கவிதை

மூச்சு நின்றுவிடும் நிலை வந்தால் அவள் முந்தானையில் நான் முத்தம்மிட்டு மடிய வேண்டும் அழகான அவள் மடியில் நான் அமைதியாக உறங்க வேண்டும்
- கவிஞர் சிவா

தலைப்பு: அவள் மடியில் கவிதை

பலரும் பார்த்திடாத அவள் ரகசியம் நான் முதல் முறை பார்த்த போது இந்த பிரபஞ்சத்தின் மகிமை அறிந்தேன்.
- கவிஞர் சிவா

தலைப்பு: பெண்ணழகு கவிதை

பூவின் இதழ்கள் அசையும் சித்திரம் பூவின் மடல்கள் வட்டம் அடிக்கும் ஓவியம் பெரிய கோவில் கோபுரத்தை நான் நேரில் பார்த்தது இல்லை பூ சாய்ந்து எழுந்த போது அந்த கோபுரமே சாய்ந்ததாய் உணர்ந்தேன் .
- கவிஞர் சிவா

தலைப்பு: அழகி கவிதை

புருவம் விரிந்தவள் பூச்சரம் சூடியவள் அவள் இதழ் விரியும் போது அணுக்களில் ஹார்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து வெப்பம் இல்லாத இடம் தேடி ஓடுகிறது அணுக்கழிவுகளாய்.❣️ .❣️
- கவிஞர் சிவா

தலைப்பு: ஏக்கம் கவிதை

கண்கள்
விரிய ஆரம்பித்தது
பூவின்
முன்னழகை பார்த்த போது
சிறந்த ஓவியம் அது
பூக்களில்
எத்தனை நதிகள்❤️ .
- கவிஞர் சிவா

தலைப்பு: அவளின் நதி கவிதை

மஞ்சள் பூ சாய்ந்து உறங்க மனசுக்குள் குருதியில் வீச்சில் அம்புகள் ஆயத்தமானது பூவின் மையத்தை தாக்க. .
- கவிஞர் சிவா

தலைப்பு: இரவின் போர் கவிதை

பூ சாய்ந்து கிடக்க பூ தேகம் சரிந்து கிடக்க தேனீக்கள் வட்டம்மிட்டது ஏன் தெரியுமா அது ஒரு அழகிய பூ❣️
- கவிஞர் சிவா

தலைப்பு: பூ கவிதை

மெல்ல திறந்து விடு சிறைக்குள் சிக்கி தவிக்கிறது வட்டமிடும் இரண்டு வண்டுகள் 💕 .
- கவிஞர் சிவா

தலைப்பு: சிறை கவிதை

கூந்தலின் மனம் நான் அறிந்ததே இல்லை நெருக்கடி சூழ்ந்த இடத்தில் முதல் படியில் அவள் அவன் அருகில் நான் மின்சாரம் பீச்சும் நரம்புகளாய் அவள் கூந்தல்.
- கவிஞர் சிவா

தலைப்பு: கூந்தல் கவிதை

அவளின் ஊடுருவல் நான் அறியாத பொக்கிஷம் முதல் முறை எப்போது ஊடுருவல் செய்தாள் என்று தெரியவில்லை மெளனக்காரி.💞
- கவிஞர் சிவா

தலைப்பு: ஊடுருவல் கவிதை

Conclusion:
ஹைக்கூ கவிதைகள் எந்த விதமான மனதையும் சின்னதாய் தட்டி எழுப்பும் .

@Writing Siva✍️💕💕💕💕

எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.

உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.

கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.

எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

nagarajasivaspeech@gmail.com

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம். .

No comments:

Powered by Blogger.