tamilquotes
தமிழ் ஹைக்கூ கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் ஹைக்கூ தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.tamilquotes.blog வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :
Admin_Siva
July 10, 2024
நம்மிடம் பேசுபவர்கள் எல்லாம் நமக்கு நன்மை பயக்கும் நண்பர்கள் என்று எண்ணி விடாதே!
இங்கே முகத்திரை இட்ட மனிதர்கள் தான் அதிகம்...
காரணம் யார் என்று எண்ணி முடிப்பதற்கு முன் ..
உந்தன் ஆயுட்காலம் முடிந்து விடும்...!! அவ்வளவு வேகமாக மனிதர்கள் ஓடுகிறார்கள்...!!
யாரையும் குறை சொல்ல இது காலமும் இல்லை அதற்கான நேரமும் இல்லை..!!
வாஞ்சையோடு அள்ளி அணைத்து முத்தம்மிட்டது எல்லாம் அந்த காலம் வஞ்சையோடு கை குலுக்குவது இந்த காலம்.
காதல் கூட மனம் பார்த்து வருவதில்லை பணம் பார்த்தே வருகிறது...!! வண்ணத்தை முன்பு ரசித்தார்கள் எங்கும் பசுமை பொங்கியது..!!
காற்று வீசும் மனம் சுவாசத்தை காதல் கொண்டு கவிதை தந்தது.. இன்று கரிம அமிலங்கள் காற்றின் மேல் காதல் கொண்டு...!!
முககவசத்தில் முத்தம்மிட்டு அக கவசத்தில் ஆண்மையை இழந்து பிள்ளைக்கு பிச்சை எடுக்க வைத்து அதில் வருமானம் பார்க்கும் மனிதனுக்கு தெரியவில்லை...
இவ்வுலகில் நிரந்தரம் ஏதும் இல்லை என்று.
தலைப்பு: மாய உலகம் கவிதை
ஆசையடி அடியே அன்பே!! பெண் எனும் கூட்டத்தில் மனக்கும் மல்லிகையே !!
அச்சு வெல்லம் போல உன் சிரிப்பு.. என் அடி மனச கேட்குதடி.
மொத்தத்தையும் நான் இப்போது தந்திடவா!! மிச்சம் கொஞ்சம் வச்சுக்கிட்டு நீ சிரிக்கும் போது தந்திடவ!!
சேலை கட்டும் நந்தவனமே நந்த வன கூட்டத்தில நான் மானாக வாழவ இல்லை நான் சிங்கமாக சீறவ...
இயற்கையின் தட்பவெப்ப நிலையை தன்னுள் கொண்டவளே!!! என்னாலும் உன்னுள் நான் இருக்க ஆசையடி.
தலைப்பு: தவிப்பு கவிதை
அக்கா... அக்காயென அழைப்பதே இனிப்பானது.. இனிப்பை விட இனிப்பு என் அக்கா....
என் அக்கா மீசை இல்லாத ராசராச சோழன் என் அக்கா நளினம் கொண்டடும் நாச்சியார் .
அன்புக்கு உருவம் காணதோர்.... என் வீட்டு கண்ணாடியை வந்து பாருங்கள் என் அக்காவின் பிம்பம் அன்பின் உருவ மாக தெரியும்....
நீண்ட பிரபஞ்சத்தின் அழகு நிலவு என்றால் நிலவின் எதிர் அழகு என் அக்கா... .
தாய் தாலாட்டு பாடி உறங்கிடும் பிள்ளை சமத்து என்றால் அக்கா தாலாட்டு பாடி உறங்கிடும் தம்பி அதைவிட சமத்து..!! .
எனக்கு முன்பே இவ்வுலகை ரசித்தவள் ஏனோ மற்ற உயிரினங்களை விட நானே அவள் உலகம்....
என்னை சுற்றியே வலம் வரும் இன்னொரு தாய். இவ்வுலகில் மீண்டும் பிறக்கும் வாய்ப்பு இருந்தால் என் அக்காவுக்கு தம்பியாய் பிறக்க வேண்டும்.
தலைப்பு: அக்கா கவிதை
நெடுந்தூரம் பயணமெல்லாம் நினைவாக வந்தவளே!! நினைவுக்கு பரிசாக உன் நினைவை தந்தவளே!!
உந்தன் வட்ட முகத்துக்கு பிரதி எடுக்க போகையிலே பிரதியின் பதிப்பு நிலாவாகி போனது என்ன!!
வெள்ளை தோல் அழகி வேப்பம் பூ சிரிப்பழகி சக்கரக்கட்டி கண்ணழகி சதா பின் தொடர்ந்து வரும் நினைவின் மாயம் என்ன!!
மஞ்சள் அரைத்து பூசி நடு நெற்றியில் திலகம் மிட்டு இதழுக்கு இஸ்திரி போட்டு இடுப்பை ஆட்டி அணைத்தவளே!
அணைப்புக்கு விடுப்பு தர இயலாமல் அள்ளல் பட்டு நான் போவது எங்கே?
ஆயிரம் வலியோடு பிரிந்து வந்த இந்த பயணம் என்னை நம்பி வந்தவளே உன் வாழ்க்கை என்னுள் தானே!!
சிரமத்தை பொருத்துக்கடி சிகரம் ஏற கூட்டி போறேன்.
தலைப்பு: நீ நானாக வேண்டும்
Conclusion:
ஹைக்கூ கவிதைகள் எந்த விதமான மனதையும் சின்னதாய் தட்டி எழுப்பும் .
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
nagarajasivaspeech@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .
No comments: