tamilquotes
தமிழ் ஹைக்கூ கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் ஹைக்கூ தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.tamilquotes.blog வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :
Admin_Siva
July 8, 2024
சில மெளனம் நம்மை தேடி அலைய வைக்கும்!! சில மெளனம் நம்மை நாடி வர வைக்கும்!!!
சில மெளனம் நம்மை மறக்க வைக்கும்!! சில மெளனம் நம்மை நினைக்க வைக்கும்!!
மெளனம் பொட்டு வைத்த பெண்ணே!
வார்த்தைக்குள் எத்தனை நளினம் நளினத்தை ரசிக்கவும் மெளனம் தேவை ...
தேவையை நிறைவு செய்ய சிறந்த நூதனமே மெளனம்.
தலைப்பு: மெளனம் கவிதை
தனக்குள் இருக்கும் ஒன்றை!! தனக்கு வெளியே தேடுவது!!
காதல் இதயத்தின் வெற்றிடத்தை காதலால் நிரப்புங்கள்!! காதல் தரும் இன்பத்தில் காலத்தை நிரப்புங்கள்!!
காமம் தரும் சொர்க்கத்தில் வாழ்க்கையை கடத்துங்கள்!! ஒரு பிறவியே நாம் பிறப்போம்
இரு பிறவியாய் கை பிடிப்போம் காற்று வீசும் திசை நோக்கி காதலை தூவுவோம்
மூச்சு காற்று முத்தம்மிட்டு காதல் செய்வோம்!!
தளிர் உடல் சிவியல் உடல் ஆனாலும். !! காதல் இளமையில் இருக்கட்டும் வாழ்வு இன்பத்தில் துளிர்கட்டும்
தலைப்பு: தவிப்பு கவிதை
தூது விடும் கண்கள்... துயில் கொள்ள மறுக்க!!
தவித்திடும் காமம் உறக்கத்தை தடுக்க!!
வாய்மொழி பேசதா... வாலிப உருவம்.. கைவிரல் பிடித்து வளையலை நசுக்க..!!
நிற்பதா படுப்பதா ஒன்றும் விலங்காமல் ஆசை காதலனுடன் ஆயத்த மானேன் போர் தொடுக்க....!!
கட்டில் சத்தமிட சன்னல் காவல் காக்க.. உருவ மாற்றத்தின் உச்சத்தில் உடுப்புக்கு விடுப்பு கொடுத்தோம் போரில் களைத்தவன் என் போதையில் மயங்கினான்..!!
முகத்தில் தெளித்த நீர் என் முகத்திரையை கலைத்தது இது கனவாயினும் மீண்டும் துயில் கொள்ள விரும்புகிறேன் என்னவன் அன்புக்காக.
தலைப்பு: துயில் கவிதை
உன் மனதின் தனிமையை போக்கும் வரத்தை எனக்கு அருளிய இறைவனுக்கு என் முதல் நன்றி..
உன் கைவிரல் கோர்த்து கவிதை எழுத வேண்டும் கவிதையின் வரிகளில் உந்தன் நளினத்தை கோர்க்க வேண்டும்..
நளினத்தின் அசைவில் ராகம் இசைக்க வேண்டும் இசையின் ஓசையில் உன் குரல் கேட்க வேண்டும்
குரலின் இனிமையில் காதல் வழிய வேண்டும் அனைத்திலும் அங்கமாய் நீ நானக வேண்டும் உயிரே நீ வேண்டும்.
தலைப்பு: நீ நானாக வேண்டும்
Conclusion:
ஹைக்கூ கவிதைகள் எந்த விதமான மனதையும் சின்னதாய் தட்டி எழுப்பும் .
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
nagarajasivaspeech@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .
No comments: