அழகிய தமிழ் ஹைக்கூ கவிதைகள்
Introduction:
வணக்கம் என் அன்பு தமிழ் உறவுகளே
இந்த பதிவில் அழகிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
Admin_Siva
July 12, 2024
நீண்ட நேர பயணம் அவளுடன் சற்று கலைப்பு தீர அவள் மடியே என் தாய்மடி ஆனது.
கண்விழித்து பார்த்தாலும் காதல் மழைத்துளி தென்றலாய் வீசிக்கொண்டு தான் இருக்கின்றது.
ஐன்னல் ஓரம் இருக்கை பலரை காதல் கொள்ள வைக்கும் சின்ன சிறைச்சாலை தான்.
மேகங்கள் கூட கருவாச்சி உருவத்தை ஓவியம் தீட்டுகிறதே பிரம்மா அழகு என்ற சொல்லுக்கு அவளுக்கு நிகர் உண்டோ.
கிராமப்புற ரோட்டினிலே குதித்து ஆடும் தாமரையே பூக்கள் யாவும் படம்பிடிக்கும்
கை தீண்டினால் காதல் ஹைக்கூ முதல் முறை பிறந்தது
பெரிய ஆலமரம் அதன் அருகில் சின்னதாய் ஒரு ஓடை பொசுக்குனு வந்து போவா என் மனச கிள்ளி போவா.
அஞ்சுகம் வீட்டினிலே ஐவர் அணி கூட்டணியும் அடிக்காத லூட்டி இல்ல காயும் கனியாகமல் விட்டது இல்ல.
தொங்கி போன மீசைக்கு தொன்னுறு வயது ஆனாலும் காதல் பூஜைக்கு ஏங்காத ஏக்கம் இல்ல.
ஒத்தையடி பாதை வடக்கு இருந்து நான் வர மேற்கு இருந்து கருவாச்சி வர கொஞ்சி இடம் கேட்டும் மசியலையே பாவி செருக்கி
மீனும் துள்ளுது மானும் துள்ளுது சரி இவள் ஏன் இந்த துள்ளல் துள்ளுகிறாள்.
ரசிக்க தெரியாதவன் கையில் காவிய மே இருந்தாலும் அது கோமியம் தான்.
நான் வரைந்த சித்திரங்கள் யாவும் என்னைவிட்டு பிரிந்த பொழுது மகிழ்ச்சி யாய் சென்றது ..எனது கடைசி சித்திரம் மட்டும் கண்ணீர் விட்டது ஏன் என்றேன் என்னை விட்டு பிரிய மனம் இல்லையாம்.
தூரத்தில் இருப்பாள் ஆனால் என் மனதில் தொந்தரவு செய்துக்கொண்டு இருப்பாள் அவள் பெயர் காதலி.
கரிசல்காடும் காய்ந்து கிடக்கும் அவள் வருகை இல்லை என்றால்.
மெளனம் சிறந்த ஆயுதம் அவள் தவறுகள் செய்யும் போது மட்டும் என்மீது ஏவுவால்.
கடற்கரை எல்லாம் அழகு என்று நினைத்து இருந்தேன்... இந்த கடற்கரை புதரே காதலர்களுக்கு அழகு.
நீண்ட நேர பயணம் அவளுடன் சற்று கலைப்பு தீர அவள் மடியே என் தாய்மடி ஆனது.
சண்டையிட நேரம் எல்லாம் முற்றுகை ஈட்ட கள்ளி மகளே பசிக்குது சோறு போடு போ.
சிற்பங்கள் யாவும் சிறைபிடிக்கப்பட்ட போதும் இவள் மட்டும் என் மனதில் தங்கிவிட்டாள்.
வேகமாக ஓடும் பேருந்தில் அவள் வெறித்தனமான பார்வை மட்டும் அழகானது
நொடிப்பொழுதில் என்னுள் வந்து சிற்றின்ப ஊர்வலம் நடத்தி கண்டும் காணாமல் போகும் இவள் யார்?
என்னிடம் மட்டுமே அவள் பார்வை நெருப்பாய் எரியும் .
ஆகாயம் எங்கும் அவள் அழகை ஒப்பனை செய்தேன் முடிவில் கற்பனையானது.
தென்றல் அடிக்கடி வந்து கேட்டு சென்றது அவள் வருகை தருவது எப்போதுயென்று.
தூரத்தில் அவள் வந்தாலே என் உள்ளத்தில் இதயம் மத்தளம் அடிக்கும் கண்களோ அவளை காண துடிக்கும்.
விளைச்சல் தராத நிலம் போல் நான் கிடக்கிறேன் அவள் இன்றி.
கொம்பு தேனைவிட இனிப்பாய் இருக்கிறது உன் காதல் என் அன்பு மலரே இந்த இனிப்பு என் ஆயுள் தீர நீள வேண்டும்.
ரசிக்க கற்று தந்தவளே நான் ரசித்த முதல் ஓவியம் நீ.
பூக்காத பூவாய் நான் தளர்த்தி கிடக்க என் வேரில் நீர் பாச்சிய கொடியே நீ மட்டும் போதும் நான் செழித்து வளர.
No comments: