காதல் ஹைக்கூ கவிதைகள் _ Love haiku kavithaigal in tamil language

Haiku Poems by Admin_Siva | Tamil Quotes Blog tamilquotes - Home

tamilquotes.blog

காதல் ஹைக்கூ கவிதைகள்

Introduction:

தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் ஹைக்கூ தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.tamilquotes.blog வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :

Admin_Siva
July 11, 2024

"மெல்ல சூடுபடுத்தி மெதுவாய் அணைத்தவளே உள்ளம் இனிக்கிறது தொடரட்டும் உன் பணி".
- கவிஞர் சிவா

தலைப்பு: பணி கவிதை

"அடியே கருப்பழகி உன்னிடம் இருப்பது கண்கள் தானா இல்ல காந்தமாடி இப்படி பிடித்து இழுக்குற".
- கவிஞர் சிவா

தலைப்பு: கருப்பழகி ஹைக்கூ கவிதை

"மூச்சு காற்று வழியே காதல் வாசத்தை கடத்தும் கள்ளி! அருகில் வந்ததும் உடம்பும் கொதிக்குதடி".
- கவிஞர் சிவா

தலைப்பு: கள்ளி கவிதை

"அது என்ன மாயாமோ நெற்றியில் மட்டுமே எப்போதும் முத்தம்மிட இலவச அனுமதி தருகிறாள்".
- கவிஞர் சிவா

தலைப்பு: இலவசம் கவிதை

"பெண்ணே அழகியல் காவியமே காதலிக்க இடம் தருவாயா ".
- கவிஞர் சிவா

தலைப்பு: இடம் கவிதை

" காத்து கிடக்கும் காற்றுக்கு தான் மழைச்சாரல் சுகம் தெரியும் ".
- கவிஞர் சிவா

தலைப்பு: சுகம் கவிதை

" பலரும் வந்து சென்ற பாடச்சாலை தான் அதில் நீ மட்டும் ஏன் என்னோடு தங்கிவிட்டாய்?".
- கவிஞர் சிவா

தலைப்பு: புணர்ச்சி கவிதை

"ஒரு நாள் உன்னோடு வாழ்ந்து விட்டால் போதும் என்று நினைத்து இருந்தேன்.என்ன மாயம் செய்தாயோ? நித்தம் உன்னை கேட்டு ராவடி பன்னுது மனசு".
- கவிஞர் சிவா

தலைப்பு: அவள் இன்பம் கவிதை

"ஒவ்வொரு முறையும் நீயே என்னை கொல்லுகிறாய் ! ஆனாலும் ஆசை அடங்கலையே ".
- கவிஞர் சிவா

தலைப்பு: இரவின் போர் கவிதை

"காகிதம் கூட காதலாய் தெரிகிறது உன்னை கண்டு தொலைத்தப்பிறகு".
- கவிஞர் சிவா

தலைப்பு: காதல் கவிதை

"யோவ் அன்பு கணவரே! ஆசையா ஒரு கடி கடிக்கட்டா?
- கவிஞர் சிவா

தலைப்பு: கடி கவிதை

"பள்ளிப்பருவத்தில் கொழுத்து திரிந்தவள் அடங்கி கிடக்கிறாள் அடுப்படியில் ".
- கவிஞர் சிவா

தலைப்பு: பாவம் கவிதை

" மீசையோடு சண்டையிடும் சண்டாளி மீசை மீது அப்படி என்னடி காதல்".
- கவிஞர் சிவா

தலைப்பு: ஊடுருவல் கவிதை

Conclusion:
ஹைக்கூ கவிதைகள் _ காதல் . இந்த பதிவு உங்களுக்கு இனிப்பான உணர்வை தந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

@Writing Siva✍️💕💕💕💕

எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.

உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.

கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.

எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

nagarajasivaspeech@gmail.com

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம். .

No comments:

Powered by Blogger.