இரவு கவிதைகள் தொகுப்பு

இரவு கவிதைகள் தொகுப்பு:



முன்னுரை:

என் அன்பான உறவுகளே, உங்கள் வருகைக்கு என் இதயம் கனிந்து வரவேற்கிறோம். இந்த பதிவில், அழகிய இரவு கவிதைகளின் தொகுப்பை உங்களுக்காக பதிவு செய்துள்ளோம். வாருங்கள், இரவின் அழகியல் கவிதைகளைக் கண்டு மகிழுங்கள்.

இரவு பற்றிய கவிதைகள்

நித்திரை கவிதை

"கண்கள் மூடி கனவில் தேடி நித்திரை வந்தது "_கவிஞர்சிவா

மயக்கம் கவிதை

"இரவுக்கு மயங்காத பூக்கள் உண்டோ மயக்கத்தில் வடியாத தேனும் உண்டோ "_கவிஞர்சிவா

மயக்கம் கவிதை

"மயங்க வைக்கும் இரவுக்கு நட்சத்திரம் காவல். "_கவிஞர்சிவா

காதல் கவிதை

"இரவில் பூக்கும் பூவாய் நட்சத்திரங்கள் மெல்ல காதல் கொள்ளும் நிலவு. "_கவிஞர்சிவா

பொட்டு கவிதை

"இரவுக்கு பொட்டு வைத்ததாய் நிலவு. "_கவிஞர்சிவா

நிலவின் கவிதை

"ஓடுகிற நதியில் கூட நிலவும் இரவில் நடக்கும்.."_கவிஞர்சிவா

ஏக்கம் கவிதை

"பூவின் வெடிப்புக்காக இரவெல்லாம் காத்து இருந்தது வண்டு.  "_கவிஞர்சிவா

பூக்கள் கவிதை

"தினமும் சூடும் பூக்கள் இரவில் பூத்தது தான் .."_கவிஞர்சிவா

கீதம் கவிதை

"குளிர்ந்த ஈரக்காற்றும் கதை பேசும் கண்கள் காதல் கீதம் பாடும். "_கவிஞர்சிவா

இருளே கவிதை

"இருளே என்னை வந்து தீண்டு இனிக்கும் முக்கனியை தந்து விட்டு தூங்கு.."_கவிஞர்சிவா

எண்ணம் கவிதை

"பலரின் வெற்றி எண்ணங்கள் இரவில் தான் பிறக்கிறது.. "_கவிஞர்சிவா

நிழல் கவிதை

"இருவருக்கும் இடையே புகுந்து செல்லும் இரவின் நிழல்.. "_கவிஞர்சிவா

தன்னம்பிக்கை கவிதை

"தன்னம்பிக்கை வரிகள் இரவில் தான் பிறக்கிறது.. "_கவிஞர்சிவா

பயணம் கவிதை

"பயணம் பகலை விட இரவில் இனிக்கும்."_கவிஞர்சிவா

அமைதி கவிதை

"எல்லோரும் சேர்ந்து வாழும் வீடு இரவில் மட்டுமே அமைதி பூங்காவாய் பிரதிபலிக்கிறது.. "_கவிஞர்சிவா

ஏக்கம் கவிதை

"மீசையோடு சண்டையிட ஆசை வந்தது அன்று தான் உணர்ந்தேன் என் இளமையின் ஏக்கத்தை. "_கவிஞர்சிவா

திருட்டு கவிதை

"புதிய இடுகைகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன என் மீது காதல் படையெடுத்து ஏனோ அவர்களுக்கு தெரியவில்லை என்மனம் இளமை துதும்பும் ஒருவனால் முன்பே திருடப்பட்டது என்று"_கவிஞர்சிவா

மடிமீது கவிதை

"கோவில் கோபுரங்கள் சாய்ந்து கிடந்தது என்னவள் மடிமீது. "_கவிஞர்சிவா

வலி கவிதை

"எல்லோரும் ஏற்க முடியாது என் இளமையின் வலியை. "_கவிஞர்சிவா

ஓவியம் கவிதை

"நான் ரசித்த முதல் ஓவியம் அந்த ஓவியத்தை தீட்டியவன் முதல் காதலியாக கூட அது இருக்கலாம்."_கவிஞர்சிவா

வேர் கவிதை

"மலர்ந்து நிற்கும் பூக்களின் வலியை வேர்கள் அறியும் "_கவிஞர்சிவா

திருமணம் கவிதை

"நீண்ட கால ஏக்கம் இளமை மறையும் முன்பே திருமணம் ஆக வேண்டும். "_கவிஞர்சிவா

சீண்டல் கவிதை

"கடல் சீற்றம் வந்து கரையில் தஞ்சம் புகுந்தது நீர் மெல்லிய உணர்வுக்கு சீண்டல்கள் தேவைத்தான் "_கவிஞர்சிவா

துள்ளல் கவிதை

"பரிச்சயம் இல்லை இருந்தாலும் கனவில் கண்ட முகம் ஏக்கமும் துள்ளலும் இதயத்தின் ஓரத்தில் "_கவிஞர்சிவா

இனிப்பு கவிதை

"வாழ்க்கை இளமையில் இனிக்கும் முதுமையில் கசக்கும் இனிப்பாய் இருக்கும் போது ரசித்துக்கொள் "_கவிஞர்சிவா

வலி கவிதை

"வாலிபம் தான் வலியை தாங்கும் "_கவிஞர்சிவா

நேர்மை கவிதை

"நேர்மையாக இருக்க கற்றுக்கொள் வாலிபம் தீர்ந்த பின் நேர்மை சில உறவுகளை கொடுக்கும்"_கவிஞர்சிவா

மெய் கவிதை

"இளமை மறைந்து போகும் வாலிபம் ஓடிப்போகும் உன்னத மெய் நிச்சயம் வெல்லும்"_கவிஞர்சிவா

போரட்டம் கவிதை

"இளமையில் போராட மறந்து விடாதே அது முதுமையை கொள்ளும்"_கவிஞர்சிவா

இலக்கு கவிதை

"இளமை ஒன்று தான் எதற்க்கும் ஏற்றது இலக்கை தீர்மானித்து நடை போடு"_கவிஞர்சிவா

மெளனம் கவிதை

"யாரிடமும் உன் இளமை இலக்கை கூறாதே மெளனம் நீண்ட நகர்ந்து செல் "_கவிஞர்சிவா

முயற்சி கவிதை

"இளமை சோதனைகள் நிறைந்த காலம் முயற்சியை மட்டும் கைவிடாதே"_கவிஞர்சிவா

இலக்கீ கவிதை

"உனக்காக  ஒருவரை தேர்ந்து எடு அவரிடம் மட்டுமே உன் இலக்கை கூறு "_கவிஞர்சிவா

சோர்வு கவிதை

"சோர்வு உன்னை தீண்டும் தளர்ந்து விடாதே "_கவிஞர்சிவா

பயணம் கவிதை

"இளமை பயணங்கள் அழகானவை அதை அனுபவிக்க மறக்காதே"_கவிஞர்சிவா

அழகு கவிதை

"ஏற்றம் இறக்கம் இளமையில் அழகு "_கவிஞர்சிவா

நிகழ்வு கவிதை

"ஓடிவரும் நீரின் அழகை ஏற்றம் இறக்கம் அறிந்து அது நகர்ந்து செல்லும் நிகழ்வை பார்"_கவிஞர்சிவா

வறுமை கவிதை

"காலம் மாறிக்கொண்டே இருக்கும் இன்றைய வறுமை நினைத்து ஓர் இடத்தில் நின்று விடாதே"_கவிஞர்சிவா

பாடல் கவிதை

"இறுக்கமான நேரங்களில்  இளமைக்கு இனிப்பான பாடல்களை கேள்"_கவிஞர்சிவா

உறுதி கவிதை

"இளமையில் ஓடி விளையாடு உடம்பை உறுதி படுத்திக்கொள்"_கவிஞர்சிவா

இளமை கவிதை

"காரணம் இருந்தாலும் கலங்காதே இளமையில் யாவும் முடியும்"_கவிஞர்சிவா

தூரம் கவிதை

"இளமையில் தூரமாக கடந்து செல்ல கற்றுக்கொள் முதுமை இனிப்பை கொடுக்கும்"_கவிஞர்சிவா

சுகம் கவிதை

"இளமை தரும் சுகத்தை நொடிகள் கூட வீண் செய்யாதே"_கவிஞர்சிவா

உதவி கவிதை

"முடிந்தவரை இளமையில் மற்றவர்களுக்கு உதவு "_கவிஞர்சிவா

அனுபவம் கவிதை

"ஆலயங்கள் சென்று வா அனுபவங்கள் பெற்று வா"_கவிஞர்சிவா


வெற்றிக்கான பொன்மொழிகள்

தன்னம்பிக்கை வெல்லும்

"தீராத முயற்சியை மட்டும் உன்னுடன் வைத்துக்கொள்" _கவிஞர்சிவா 

உங்களை நம்புங்கள்

"நீங்கள் முடியும் என்று நம்புங்கள், உங்கள் வாழ்வு முழுமை அடைந்து விடும்." – சோழநாட்டு கவிஞர் 

  • தமிழ் ஹைக்கூ கவிதைகள் 
  • தமிழ் வாழ்வியல் கவிதைகள் 
  • தமிழ் இளமை கவிதைகள் 
  • தமிழ் ஹைக்கூ இளமை கவிதைகள் 
  • தமிழ் மோட்டிவேஷன் கவிதைகள் 
  • தமிழ் தன்னம்பிக்கை கவிதைகள் 
  • சோழநாட்டு கவிஞரின் கவிதைகள் 


உழைப்பு

"நித்தமும் உழையுங்கள் வாழ்வில் மேன்மை பெறலாம்." _கவிஞர்சிவா 

தேவை கவிதை

"உன் தேவை முடியும் வரை உறவை தேடாதே உன் ஆயுள் முடியும் வரை உறவை தேடு"_கவிஞர்சிவா

தோல்வி கவிதை

"தோல்வி என்பது முடிவு இல்லை ஆரம்பம் என்பதை மறவதே"_கவிஞர்சிவா

வாழ்க்கை கவிதை

"பலர் வாழ்வில் வந்து போகலாம் ஆனால் வாழ்க்கை என்பது நிரந்தரம்"_கவிஞர்சிவா

முயற்சி கவிதை

"முயற்சியை ஒருபோதும் விடாதே தொடர்ந்து பயணம் செய்து கொண்டு இரு"_கவிஞர்சிவா

நண்பர்கள் கவிதை

"வாழும் போது நல்ல நண்பர்களை தேர்ந்து எடு வாழ்க்கை நன்றாகவே நகரும்"_கவிஞர்சிவா

இளமை காதல் கவிதை

"இளமை காதல் என்பது உணர்வுகளின் பிறப்பிடம் தான் உள்ளத்தின் ஆழத்தில் ஏக்கம்"_கவிஞர்சிவா

டோர் கவிதை

"என் ரகசியங்கள் அறிந்த வாய் பேச முடியாத தடுப்புச்சுவர்"_கவிஞர்சிவா

வெற்றிலை கவிதை

"காரம் உடையது வண்ணத்தை பரிசு அளிக்கும் ஆற்றல் உடையது"_கவிஞர்சிவா

தூரல் கவிதை

"எங்கோ பிறந்து என்னை வந்து தொடும் ஈரம் சுரக்கும் மத்தாப்பு"_கவிஞர்சிவா

முடிவு

இந்த கவிதைகள் உங்கள் கனவுகளை அடையவும், வாழ்க்கையின் அழகை நேசிக்கவும் உங்களை ஊக்குவிக்கின்றன என்று நம்புகிறேன். நேர்மறையான மனநிலையினால் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்! இளமையின் ஒளிவீசும் தருணங்களை கொண்டாடுங்கள், கவிதைகளில் திகழும் உணர்வுகளை அனுபவியுங்கள்.

No comments:

Powered by Blogger.