மனைவியை பற்றிய முழு கவிதைகள் தொகுப்பு உங்கள் மனதில் காதலை கூட்டும்

மனைவி கவிதைகள் தொகுப்பு
Header Image

முகப்பு

என் அன்பான உறவுகளே உங்கள் வருகையை அன்புடன் வரவேற்கிறது இந்த வலைத்தளம் , இந்த பதிவில் அழகிய மனைவி கவிதைகளின் தொகுப்பை பதிவு செய்து உள்ளோம் வாருங்கள் காண்போம்.

Table of Contents

இதயம் கவிதை

துடிப்பதற்கு இதயம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினேன் அவன் என்னவளை தந்தான்.

- கவிஞர் சிவா
Quote Image
மனநோயலி கவிதை

சரித்திரம் படைத்த என்னவள் வாழ்க்கை சரிந்து கிடக்கிறது என்னால் நான் ஒரு மனநோயலி.

- கவிஞர் சிவா
உறவு கவிதை

ஆண்களின் வாழ்க்கை உளவியல் கொண்டது அதை ரசித்து ருசிப்பது மனைவி எனும் உன்னத உறவு.

- கவிஞர் சிவா
நிழல் கவிதை

அதிகாலை எழுந்தவள் முதல் பார்வை என்மீது தான்
நினைக்க துவங்கும் முன் என் நிழலாய் அவள்.

- கவிஞர் சிவா
அழகு கவிதை

ஏழ்மையில் தான் அவள் நிஜ அழகு அந்த பெளர்ணமி போல் மிளிர்கிறது .

- கவிஞர் சிவா
அமிர்தம் கவிதை

பழைய சோறு தான் ஆனால் என் மனைவியின் கை பட்டதும் எனக்கு அமிர்தம் ஆனது.

- கவிஞர் சிவா
மகிழ்ச்சி கவிதை

ஓலை குடிசை தான் ஒரு போதும் மகிழ்ச்சி ஓய்ந்தது இல்லை அவளுடன்.

- கவிஞர் சிவா
அன்பின் வெளிப்பாடு கவிதை

தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் என்னவள் அன்பின் வெளிப்பாடு.

- கவிஞர் சிவா
யுத்தம் கவிதை

சத்தம் இன்றி யுத்தம் செய்யும் சாமார்த்தியம் அவளிடம் உண்டு ஆனாலும் மெளனத்தை மட்டும் பரிசு அளிப்பாள் நான் செய்யும் தவறுக்கு.

- கவிஞர் சிவா
அரசன் கவிதை

கோட்டை இல்லை ஆனால் அவளுக்கு நான் தான் அரசன்.

- கவிஞர் சிவா
என்னவள் கவிதை

மீசை இல்லாத பூ( என்னவள்) எப்போதும் தேன் சுரக்கும் அவள் வார்த்தைகள். என் செவிகளுக்கு தேன் அமிர்தம்.

- கவிஞர் சிவா
இளவரசி கவிதை

நூதன முறையில் இதயத்தின் துடிப்பை திருடும் இனியவள் என் காட்டின் காதல் இளவரசி.

- கவிஞர் சிவா
கவிதைகாதலி கவிதை

தண்ணீர் ஓடையில் மிதக்கும் பூவாய் காற்றோடு கவிதை படிக்கும் என் அழகே நீ என் கவிதை காதலி.

- கவிஞர் சிவா
அவளின் பிரதிபலிப்பு கவிதை

செப்பேடுகள் வரலாற்று புதினம் காலங்கள் கடந்து பின்னும் வரலாற்றை பிரதிபலிக்கும் கண்ணாடி என்னவளே நீ என் வாழ்வை பிரதிபலிக்கும் கண்ணாடி.

- கவிஞர் சிவா
அழகின் கவிதை

எல்லோரும் சேர்ந்து வெற்றி பெறுதல் அமைப்பின் வெற்றி வாழ்வே வெற்றி பெறுவது பொண்டாட்டி எனும் அழகின் வெற்றி.

- கவிஞர் சிவா
ஏக்கம் கவிதை

ரசிக்க நீயும் நெஞ்சில் தவழும் நினைவில் பூத்து குலுங்கும் பூவும் நீ தானே
மனைவி ஏக்கம் மண்ணில் சாயும் வரை உண்டு தானே.

- கவிஞர் சிவா
மனைவி கவிதை

சூரியன் நிம்மதியாக உறங்க என் மனைவி ஆறுதல் கூற வெள்ளை நட்சத்திரம் துள்ளி குதித்து என் மனதில் நிலவாய் பிறந்தது

- கவிஞர் சிவா
நேசம் கவிதை

நேசிக்கிறேன் உன்னை நீயே என் காதல் பூசிக்கிறேன் உன்னை நீயே என் மனைவி

- கவிஞர் சிவா
அள்ளிராணி கவிதை

தென்றல் வீசும் தின்னையும் ஏங்கும் தேரடி வீதியில் தேன் நிலவாய் அவள் வந்தாள் அரச இலை காடும் அவள் பாதம் ஏந்தும் அள்ளி ராணியை அன்பாய் அணைக்கும்

- கவிஞர் சிவா
காதல்கனவு கவிதை

நித்தம் சிரிப்பாள் நினைவோடு இருப்பாள் ஆடி மாதம் அப்பன் வீட்டுக்கு போனவள் என் அடிமனதில் நித்தமும் காதலாய் தூண்டி கனவில் இருப்பாள்.

- கவிஞர் சிவா
நிம்மதி கவிதை

எல்லோரும் சேர்ந்து வாழும் வீடு என்னவள் மட்டும் இல்லை என்றால் எனக்கு நிம்மதி என்பது இருக்காது.

- கவிஞர் சிவா
அழகி கவிதை

இந்த உலகில் சிறந்த அழகியை நான் வேறு எங்கும் பார்க்க வில்லை எங்கள் வீட்டு கண்ணாடியில் நித்தமும் பார்க்கிறேன்.

- கவிஞர் சிவா
Quote Image
கீர்த்தனை கவிதை

என்னோடு மட்டும் சண்டையிடும் பொழுது அவள் கண்ணில் மகிழ்ச்சி பொங்கும் பாவனைகள் கீர்த்தனை பாடும்

- கவிஞர் சிவா
நிரந்தரம் கவிதை

சிலர் வருவார்கள் போவார்கள் இவள் மட்டும் எப்பவும் நிரந்தரம்

- கவிஞர் சிவா
குழந்தை கவிதை

கொஞ்சி பேசும் பொழுது மட்டும் என்னவள் என் குழந்தை போல் மாறுகிறாள்.

- கவிஞர் சிவா
ஹைக்கூ கவிதை

காலங்கள் கடந்து பின்னும் காதல் ஹைக்கூ அவள்.

- கவிஞர் சிவா
அவள்வருகை கவிதை

எப்போதும் தேன் சுரக்கும் நிலவு போல் இருப்பாள் தேகம் எங்கும் நெய் வாசனை வீசும் காற்று கூட காதல் கொள்ளும் அவள் வருகை.

- கவிஞர் சிவா
நான் கவிதை

எல்லோரும் அவளை ஒதுக்கிய பின்னும் அவள் நிலவாய் பிரகாசிக்க நான் அவளுடன்.

- கவிஞர் சிவா
மனம் கவிதை

மனம் தவியாய் தவிக்கும் அவள் இல்லாமல் என்னை அறியாமல் என்னுள் வந்தவள் என் மனைவி.

- கவிஞர் சிவா
வீழ்ச்சி கவிதை

தோற்று போகும் நிலை வந்தாலும் நான் என் மனைவியிடம் மட்டுமே தோற்க விரும்புகிறேன்

- கவிஞர் சிவா
கண்ணகி கவிதை

கண்ணியமாய் குடும்பம் நடத்தும் என் கண்ணகி அவள் கூட இருந்து விட்டால் என் ஆயுள் தீருவது எனக்கே தெரியாது.

- கவிஞர் சிவா
பாசம் கவிதை

ரோசம் வரும் அவளிடம் மட்டும் பாசம் வரும்.

- கவிஞர் சிவா
திறமை கவிதை

வாசலில் கோலம் என்னவள் திறமையை கந்த சஷ்டி கவசம் போல் பாடிக்கொண்டே இருக்கிறது.

- கவிஞர் சிவா
புகழ் கவிதை

தெற்கை பசுமை சோலை தென் கிழக்கில் கரும்பு சோலை வட்டமிடும் பட்டமாய் என் மனைவி வாய்க்கால் நீரும் அவள் புகழ் பாடும் .

- கவிஞர் சிவா
ஓய்வு கவிதை

உழைப்புக்கு உயிர் கொடுத்தவள் உறவுக்கு தோள் கொடுத்தவள் என்னாலும் உழைக்கும் அவளுக்கு இறைவன் எப்போது ஓய்வு கொடுப்பான்.

- கவிஞர் சிவா
புன்னகை கவிதை

சிட்டுக்குருவி போல் சினுங்க பாடும் எங்கள் வீட்டு சிட்டே என் அன்பு மனைவியே உன் புன்னகை குரல் ராஜமெளயி ராகம் நித்தமும் சிறகடித்து பாடிக்கொண்டே இரு நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

- கவிஞர் சிவா
புன்னகை கவிதை

சிட்டுக்குருவி போல் சினுங்க பாடும் எங்கள் வீட்டு சிட்டே என் அன்பு மனைவியே உன் புன்னகை குரல் ராஜமெளயி ராகம் நித்தமும் சிறகடித்து பாடிக்கொண்டே இரு நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

- கவிஞர் சிவா
உறவு கவிதை

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் என்னவள் நீயே என் முதல் உறவு.

- கவிஞர் சிவா
குணம் கவிதை

பேசாமல் இருந்து பின் கோவமாக பேசுவது அவள் குணம்.

- கவிஞர் சிவா
பொட்டு கவிதை

நெத்தி மீது எனக்காக இடம் ஒதுக்கி பொட்டு வைத்து வருபவளே உனக்காக என் இதயத்தை கொடுத்து விடவா.

- கவிஞர் சிவா
ஈர்ப்பு கவிதை

நீ ஈர்ப்பு விசை நான் உன் மைய விசை மேடு பள்ளங்கள் நிறைந்த பூமியில் மனம் எனும் சமதளத்தில் இனைந்து மனைவியாக வாழ்பவளே ஏதும் என் மீது குறையுண்டா?

- கவிஞர் சிவா
ராணி கவிதை

ஊர் முழுவதும் அவள் பேச்சு ஒத்தையில ராணி போல் வாழ்வதாக.

- கவிஞர் சிவா
வெற்றி கவிதை

எல்லோரும் வெற்றி வேங்கை தான் அவர் அவர் மனைவி பேச்சை கொஞ்சம் பாசமாய் கேட்டால்.

- கவிஞர் சிவா
மல்லிகைப்பூ கவிதை

தினமும் காலையில் எங்கள் வீட்டில் மட்டும் மல்லிகை பூக்கள் மனித நேயத்துடன் மலரும் என் மனைவியாக.

- கவிஞர் சிவா
காதல் கவிதை

விரைந்து ஓடும் தென்றல் காற்றும் காதல் கொள்ளும் என்னவளே நீ சாலையில் நடந்து வந்தாள்.

- கவிஞர் சிவா
பாசம் கவிதை

மேகங்கள் மெல்ல நகர்ந்து பல பிம்பத்தை பிரதிபலிக்கும் அவள் கண் தாக்குதல்கள் மெல்ல நகர்ந்து பாசத்தை பிரதிபலிக்கும்.

- கவிஞர் சிவா
குறிஞ்சிப்பூ கவிதை

அவள் அழகு தேவதை அவள் பேச்சு தேன் வடியும் பூ அவள் பார்வை நெருப்பாய் ஈர்க்கும் காந்தம் அவள் சிரிப்பு சிதறி ஓடும் முத்துக்கள் அவள் சிந்தனை புற்களின் நுனியில் குடை பிடிக்கும் பனித்துளி அவள் நடை ஏற்றம் இறக்கம் கொண்ட மவுன்டைன் வழித்தடம் மொத்தத்தில் அவள் சிரிக்கும் குறிஞ்சி பூ.

- கவிஞர் சிவா
காத்திருப்பு கவிதை

மீண்டும் இசைக்க காத்து கிடக்கும் யாத்திரை வாத்தியம் அவள்

- கவிஞர் சிவா
இனிப்பு கவிதை

பூக்கள் யாவும் படம்பிடிக்கும் பூஞ்சோலையும் வெட்கம் கொள்ளும் இனிப்பாய் இறுக்கும் கரும்புக்கு இமை மூடாது கடி கிடைக்கும்.

- கவிஞர் சிவா
மகாராணி கவிதை

பூச்சரம் பூண்டவள் புன்னகை உதிர்த்தவள் உணர்வை மீட்சி செய்து காதலை வளர்ப்பவள் என் வீட்டு மகாராணி

- கவிஞர் சிவா
மனைவி கவிதை

ஆயிரம் தவறுகள் என் மீது இருந்தாலும் என்னை தாலாட்டும் தென்றல் அவள் கோவத்தை அடக்கி இன்பத்தை மட்டும் வெளிப்படுத்துபவள் நறுமணமும் வீசும் நதிநீர் குடம் என் மனைவி.

- கவிஞர் சிவா
நதி கவிதை

கையோடு கை உறச காணல் நீர் மீன் பிடிக்க வற்றாத நதி நீருக்கு ஈரம் சொட்டும் இனியவளே உன் கூந்தல் நீண்டு ஓடும் நதியோ

- கவிஞர் சிவா

முடிவுரை

நன்றி, எங்கள் வலைத்தளத்தில் சிறந்த கவிதைகள் உங்களுக்கு சிறப்பான உணர்வுகளை பகிர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன், உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்,இந்த உதவியை எங்களுக்காக செய்யுங்கள்.

No comments:

Powered by Blogger.