
Introduction: இந்த பதிவில் மனைவின் அழகிய நிகழ்வுகளை கவிதையாக எழுதி இருக்கிறேன் வாருங்கள் கவிதையை பார்க்கலாம்
Admin_Siva
July 23, 2024
கவிதை: மனைவி தாய்
அழகாய் அவள் வருகை
என் மனதோடு ஆறுதல் பேசியது
அழகாய் அவள் புன்னகை
என் மனதோடு தென்றலாய் பேசியது
அழகாய் அவள் பார்வை
என் மனதோடு தூய்மையை பேசியது
அழகாய் அவள் அணைப்பு
என் மனதோடு தாய்மையை பேசியது
இவள் என் தாரம் தான்
ஆனால் எப்படி தாய்யானால் என்று தெரியவில்லை.
- கவிஞர் சிவா
கவிதை: மனைவி
உழைப்புக்கு ஊதியம் கொடுத்தால் என் வீட்டு எஜமானி என் மனைவி தான்.
- கவிஞர் சிவா
கவிதை: பழகு
மனசு முழுக்க சந்தோஷம் கிடைக்க பிறரிடம் மெளனமாக இருந்து பழகு மனைவியிடம் வெளிப்படையாக இருக்க பழகு.
- கவிஞர் சிவா
கவிதை: அவளின் அன்பு
தாவணி பாவாடை
என் சிற்பத்தின் அழகியல்
அவள் தத்தி ஓடும் வெள்ளை நதி
அவள் கண்கள் பரவசமூட்டும் நாவல் பழம்
துவக்கத்தில் துவர்ப்பு சுவை முடிவில் இனிப்பு சுவை.
- கவிஞர் சிவா
கவிதை: நேர்மை
சிலையாக வடிக்கப்பட்டுள்ள
சிற்பங்களில் சிறிய குறை இருந்தால்
அது மீண்டும் கற்களே
மனிதா
குறையின்றி உன்னை நித்தமும் செதுக்கு
நீயும் சிறந்த சிற்பங்கள் தான்.
- கவிஞர் சிவா
கவிதை: உதவி
பிறர் உதவி போற்றுதல் உடையது இவள் உதவி வாழ்வில் மாற்றுதல் உடையது.
- கவிஞர் சிவா
கவிதை: அழகு
இறைவன் படைப்பில் இமை முடிக்கூட அழகு தான்.
- கவிஞர் சிவா
கவிதை: சோர்வு
தென்றல் வீசும்
திசைகள் சினுங்கும்
மரங்கள் யாவும் நாட்டியம் ஆடும்
தூரத்தில் வெள்ளை நிலா
வானத்தில் ஜொலிக்கையில
மனசோர்வு மறந்து போகும்
மகிழ்ச்சி தவழ்ந்து வரும்.
- கவிஞர் சிவா
கவிதை: இதயம்
நித்தம் துடிக்கும் இதயமும் நித்தமும் துடிக்கும் என்னவளும் என் இதயம் தான்.
- கவிஞர் சிவா
No comments: