மனைவி ஏக்கம் கவிதை

மனைவி ஏக்கம் கவிதைகள்
Header Image

Introduction: இந்த பதிவில் மனைவின் அழகிய நிகழ்வுகளை கவிதையாக எழுதி இருக்கிறேன் வாருங்கள் கவிதையை பார்க்கலாம்

Admin_Siva
July 22, 2024

கவிதை: காதல் கீற்று

தீயாய் தவிக்கும் அவள் காதல் கடலை யார் அறிவாரோ? மனம் தவிக்கும் மத்தாப்பு ஜொலிக்கும் காதல் கீற்றில் கனவுகள் பிறக்கும் தீயாய் தவிக்கும் அவள் காதல் உணர்வுக்கு கள்ள கபடம் அற்ற காதலன் கிடைப்பான இந்த பிரபஞ்சத்தில்.

- கவிஞர் சிவா

கவிதை: மனைவி

முறையாக பேச தெரியாதவள் முயல் போல முறைத்து பார்ப்பவள் அழகுக்கு அழகு சேர்க்கும் அந்தியூர் ஆடல் அரசி வலிகள் பல வாழ்வில் இருந்தும் சிரிப்பை மட்டுமே நித்தம் உதிர்ப்பவள் அவள் யார் அறிவீரோ அவளே என் மனைவி.

- கவிஞர் சிவா

கவிதை: முற்றுப்புள்ளி

எல்லாம் முடிந்து விட்டது என்ற முற்றுப்புள்ளியில் இருந்து எங்கள் வாழ்க்கை தொடங்கியது. வசந்தம் தரும் சுகம் அறியாத எங்கள் வாழ்க்கையில் தென்றலின் குளுமை வீச தொடங்கியுள்ளது.

- கவிஞர் சிவா

கவிதை: வாழ்க்கை

உன்னை நம்பி வந்தவளை நீ தாங்கா விட்டால் வேறு யார் தாங்குவது.

- கவிஞர் சிவா

கவிதை: மனைவி

மனைவியாக வரும் அவளை நீ உன் குழந்தையாக பார் உங்கள் வாழ்க்கை சிறக்கும்.

- கவிஞர் சிவா

கவிதை: வலி

முந்திரி காடும் முத்தான மேடும் அவள் முன்னங்கால் வலி அறியும் .

- கவிஞர் சிவா

கவிதை: தேர்

எல்லாரும் சேர்ந்து இழுத்த தேர் நடுத்தெருவில் நின்னது அவள் வருகையை முன்னிட்டு அவள் என் மனைவி.

- கவிஞர் சிவா

கவிதை: அச்சிட்டு

தூரத்தில் கிடக்கும் என் மனது அவள் நினைவை மட்டுமே அச்சிட்டு கொண்டு இருக்கிறது.

- கவிஞர் சிவா

கவிதை: இதயம்

நறுமணமும் கமழுமடி நறுமுகை உன் வாசம் நீ மெல்ல சிரித்தாள் துள்ளி குதிக்குமடி என் இதயம். .

- கவிஞர் சிவா

Submit Your Quote

Quote submitted successfully! Your quote added above
Failed to submit quote. Please try again.

No comments:

Powered by Blogger.