மனைவி கவிதைகள்

மனைவி கவிதைகள்
Header Image

Introduction: இந்த பதிவில் மனைவின் அழகிய நிகழ்வுகளை கவிதையாக எழுதி இருக்கிறேன் வாருங்கள் கவிதையை பார்க்கலாம்

Admin_Siva
July 20, 2024

கவிதை: ஏக்கம்

எனக்கான ஏக்கம் இன்றைய பொழுது அவள் மனதுடன் சிரித்து பேசி மறைய வேண்டும்.

- கவிஞர் சிவா

கவிதை: நிழல்

மெளனமாக கடந்து செல்லும் வாழ்க்கையில் என் நிழல் அவள்.

- கவிஞர் சிவா

கவிதை: அவள் கண்கள்

அதிகம் பேச மாட்டாள் கண்கள் மட்டும் பேசும் அதுவே இனிய உணர்வை உள்ளத்தில் தரும்.

- கவிஞர் சிவா

கவிதை: எதிர் காலம்

மனைவியாக மட்டும் இல்லாமல் என் நிழல் போல இருந்தவள் இறந்துவிட்டாள் எதிர்காலத்தில் அவள் இன்றி எப்படி வாழ்வது.

- கவிஞர் சிவா

கவிதை: மனைவி

இளமை சோலையில் பூக்கள் யாவும் காதல் கீதம் பாடும் அவள் மட்டும் என் பெயரை கீதமாக பாடுவாள் அவளே என் அன்பு மனைவி.

- கவிஞர் சிவா

கவிதை: காதல்

கதை பேசும் நேரம் யாவும் நிலவையும் என் கண்ணையும் பார்ப்பாள் நான் ஏன் என்று வினவினால் காதல் என்பாள்.

- கவிஞர் சிவா

கவிதை: விருந்தாளி

விடுமுறை நாட்களில் மட்டும் என் மனைவி விருந்தினராக மாறிவிடுவாள் நான் அடுப்பங்கரையில் இன்று ஒருநாள் அவளுக்கு ஓய்வு.

- கவிஞர் சிவா

கவிதை: சாமி

தன் தூக்கத்தை தொலைத்து எனக்காக பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் என் மனைவியை விடவா இவ்வுலகில் நடமாடும் சாமி இருக்க போகிறது.

- கவிஞர் சிவா

கவிதை: அவள் அன்பு

என் அதிகாலை பொழுதுகள் யாவும் அவளுக்காக காத்து கிடக்கும் ஏன் தெரியுமா அவள் உசுப்பும் சுகம் இந்த பிரபஞ்சம் எனக்கு அளித்த கொடை அவள் எழுப்ப காத்து கிடப்பது தப்பில்லை தானே.

- கவிஞர் சிவா

Submit Your Quote

Quote submitted successfully! Your quote added above
Failed to submit quote. Please try again.

No comments:

Powered by Blogger.