
Introduction: இந்த பதிவில் அழகிய நிகழ்வுகளை கவிதையாக எழுதி இருக்கிறேன் வாருங்கள் கவிதையை பார்க்கலாம்
Admin_Siva
July 18, 2024
கவிதை: காத்திருப்பு
பொத்தி வைத்த ஆசையெல்லாம் பொத்துக் கிட்டு ஊத்துது தென்னை ஓலை ஒன்று என்ன தொட்டுவிட பார்க்குது காத்து இருந்த கருங்குயிலும் சோடியத்தான் தேடுது இறைவன் படைப்பில் காத்திருந்து கிடப்பதுதான் காலம் காலம் நடக்குது.
- கவிஞர் சிவா
கவிதை: அழகான வாழ்வு
சிலர் பேசும் போது வலிக்கும் அதற்காக மனம் தளராதே...! உன்னிடம் இருப்பதே இவ்வுலகில் சிறந்த குணம் அமைதியாய் கடந்து விடு உன் அழகான வாழ்வை ரசித்து வாழ்ந்து விடு. .
- கவிஞர் சிவா
கவிதை: அவளின் சோகம்
அவள் வியர்வையின் வாசம் வீசும் சோகம் நீ அறிந்தால்.. அவளை தொட்டு விட்டு கடந்து செல்ல விரும்ப மாட்டாய் அவள் சோகம் அறிந்து ஆறுதல் கூறி தாய் போல் தாலாட்டாமல் செல்லமட்டாய்
- கவிஞர் சிவா
கவிதை: பால் சொம்பு
ஈரம் கசிந்து நிற்பது நீ யா சந்தன மரத்துக்கு ஏக்கம் தீயா கையடக்க பொருளும் காத்து நிற்கும் வேலை பூச்சரமே பூஜையில பஜனையிடும் மாலை மல்லிகைப்பூ மணக்கும் மத்தாப்பு ஜொலிக்கும் வெள்ளி சொம்பு ஒன்னு பிறை நிலவா கிடக்கும் இருகால் பூனை ஒன்னு பால் திருட ஓடும் அது நான்கு கால் மரக்கட்டை நடுவினிலே பாயும் குடித்த பாலுக்கு பூனை போடும் பாரு ஆட்டம் நான்கு மரக்காலும் நாடி வந்து போதும் யென கூறும்.
- கவிஞர் சிவா
கவிதை: ஆடல் பாடல்
ஒய்யார மேடையிலே ஆடுது புலி ஆட்டம் கண்ணை கவரும் கனிகளின் குத்து ஆட்டம் முன்னே பின்னே ஆடி அசைந்து ஆடுதும்மா கன்னி ஆட்டம் வச்ச கண்ணு வாடாமல் ஏங்குதம்மா மக்கள் கூட்டம்.
- கவிஞர் சிவா
கவிதை: வெட்டுக்கிளி வேதனை
சிலிர்த்த தேகம் எங்கும் சந்தனமும் ஜவ்வாதும் மணக்க சிலந்தி வலை போல சேலையும் பின்னி தொலைக்க காத்து இருந்த வெட்டுக்கிளி நூலைத்தான் மெல்ல கடிக்க காணாத காட்சியை அது கண்டுத்தான் தொலைக்க. மெல்ல அது மயங்க மேனி தளீராய் துடிக்க சொல்ல வந்த காதலை சொல்லாமல் கிடக்க வெட்டுக்கிளி வேதனையில் வாடுதடி.
- கவிஞர் சிவா
கவிதை: பூவின் பள்ளம்
மென்மையான பூ இதழ் ஒன்று விரிக்க இமை மூடும் நேரத்திலே வண்டு மெல்ல அதை கடிக்க பூவும் அதை ரசிக்க ஊத்து நீர் ஊற்றி பூவின் பள்ளம் தான் நிரம்ப சொக்க வைக்கும் அழகில் பூவும் தான் ஜொலிக்க. வண்டும் சந்தோஷமாக கடிக்க இளைப்பாறிய நிலையில் வண்டும் பூவும்.
- கவிஞர் சிவா
கவிதை: ஆச்சார பூவழகி
நீண்ட காட்டுக்குள் நீயும் நானும் போகலமா மனதில் தோன்றியத தயக்கம் இன்றி பேசலாமா அன்பின் அழகி ஆச்சார பூவுலகில் புத்தனின் புதல்வி நெருங்கி வரலாமா நேசம் தரலாமா? கையின் ஈடுக்கில் காதல் பட்டம் விடலாமா? கூறடி மசிந்து நிற்பவளே
- கவிஞர் சிவா
கவிதை: மங்கை பூ
மாலையில் பூக்கும் பூ இதுவோ மங்கை இவள் பாதுகாக்கும் பூ இதுவோ மடல் ஓரம் மடிப்பு மலை சின்னதாய் மணல் திட்டு அங்கே சில ஊசி இலை காடு முப்போகம் சாரல் மலைக்காடு விவசாயம் நீ செய்ய ஏத்தது இந்த பூமி ... வற்றாம நீர்வீழ்ச்சி நித்தமும் காமி
- கவிஞர் சிவா
No comments: