
Introduction: இந்த பதிவில் அழகிய நிகழ்வுகளை கவிதையாக எழுதி இருக்கிறேன் வாருங்கள் கவிதையை பார்க்கலாம்
Admin_Siva
July 17, 2024
கவிதை: கிராமத்து சோலை
சோலையிலே ஒத்தப்பூவு சோடிக்காக காத்து இருக்கு வண்ண வண்ண தேன் யாவும் உறல் போட்டு மூடி இருக்கு. வாசல் வரை வந்த வண்டும் கொழுசு ஓசை கேட்டு ஓடிச்சி வருத்தம் வந்து தாக்க பூவும் மெளனத்தை கிளர்த்திடிச்சு பொத்தி வைத்த தேன் யாவும் ஒத்தையில பொங்கிடிச்சி இயற்கையின் படைப்பை பூவும் விமர்சனம் செய்துடிச்சி.
- கவிஞர் சிவா
கவிதை: பொண்மகள் மடி
அந்தி மயங்கும் புத்தி நெளியும் பொண்மகள் காதல் அலை அடிமனதில் அடியாய் அடிக்கும் ... பூ வாடை வீசும் புது தென்றல் வீசும் இதழுக்கு சாயும் பூசி பிறை ஒன்று பிறக்கும் .. மந்திரப் புன்னகை மணிக்கு ஒருமுறை மனசை மயக்கம் முடிவில் அவள் மடியில் சரிக்கும்.
- கவிஞர் சிவா
கவிதை: அழகி புகைப்படம்
சாலையிலே சேலை ஒன்னு தத்தி ஓட கண் பார்வை யாவும் பின்னே அதை துரத்தி ஓட.. வேகத்தடை மெல்ல வந்து துடுப்பு போட காட்சி ஒன்னு கண்ணுக்குள்ள நீந்தி ஓட இமை நான்கும் வலையாக மாறி நிற்க இம்மி பிசராமல் அழகு ஓவியம் வாழுதே கண்ணுக்குள்ள.
- கவிஞர் சிவா
கவிதை: வெள்ளை காத்து
வெள்ளை காத்து வீச நட்சத்திரம் யாவும் வெளிச்சம் வீச சோலையில பூத்த பூவும் செதிய தான் தூது வீச கொட்டும் மழையில் கூட தன் இறக விரித்திக்குட்டு குடைக்குள் பூவும் வாழ்வின் பலனை தரிசனம் தணிக்க. மெல்ல மலர்ந்து மணந்தது தன் ஜோடியை.
- கவிஞர் சிவா
No comments: