
Introduction: இந்த பதிவில் அழகிய கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை கவிதையாக எழுதி இருக்கிறேன் வாருங்கள் கவிதையை பார்க்கலாம்
Admin_Siva
July 16, 2024
கவிதை: கிராமத்து குளியல்
அடியே
அன்னக்கொடி
உன் செட்டு பொம்பளை எல்லாம்
பாவடைய எடுத்துக்கிட்டு படபடக்கா போறள்க!
நீ சினுங்கி சீர் தூக்கி
அசைந்து நிற்கிறாயே ஏன்டி
மஞ்சள் கயிறு கட்டி
மரிக்கொழுந்து வாட பூட்டி
கொள்ளை
ஓரம் கொஞ்சி விளையாடும்
பாவடைய நீ பாக்கலையா
எடுத்துக்கிட்டு போடி பாவி செருக்கி
அந்தி சாய்ந்திருச்சு
சீக்கிரம் போய் குளித்து வாடி...
சென்பகம் மெல்ல இழுக்க
அன்னக்கொடி அசைந்து கொடுக்க
கோட்டை மயில் சிறை உடைத்து வானம் நோக்கி படையெப்பது போல
தாவணி தான் உடுத்தி
தாழம்பூ தலையில் சூட்டி
தகதகனு மின்னுக்கிட்டு இளவட்டம் கரைசேர
இன்னைக்கு
நதி நீருக்கு லாட்டரி அடித்தது போல் நிலவை நதி மேல் மிதக்கவிட்டு
குளிர்ந்த நீரும் குழுங்கி சிரிக்க
இளவட்டம்
நதியில் இறங்கி குத்தாட்டம் போட
கரையோரம் காத்து இருந்த
கருங்குயில் வாய்யோரம்
வனப்பு வழியுதடி.
அது வாடி தொலைக்குதடி.
தண்டை காக்க வாழமட்டை இருப்பது போல்
கெளுத்தி மீன் கடியை காக்க பாவடை இருக்குமோ?
ஏதும் அறியாத இளம் கவிஞன் நான்
ஏற்றம் இறக்கம் குறைந்தால் மன்னித்து விடுங்கள் ஐயா.
- கவிஞர் சிவா
No comments: