
Introduction: இந்த பதிவில் அழகிய தமிழ் காதல் ஹைக்கூ கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்
Admin_Siva
July 15, 2024
கவிதை: கள்ளிச்செடி
மடல் விரித்த கள்ளிச்செடி மனம் விட்டு வாடுதடி காற்றோடு தூது சொல்லி தன் காதலை தான் தேடுதடி
- கவிஞர் சிவா
கவிதை: காத்திருப்பு
காலங்கள் ஓடிவந்து ஆசையைத் தான் தூண்டுதடி ஏக்கங்கள் ஓடிவந்து காதலைத் தான் தூண்டுதடி காத்திருப்பு மட்டுமே என் வாழ்க்கை ஆனதடி.
- கவிஞர் சிவா
கவிதை: பட்டர் மில்க்:
மணக்கும் தேகத்தின் மகத்தான மகசூல் நீ மிளிரும் அங்கத்தின் செழிப்பான பட்டர் மில்க் நீ.
- கவிஞர் சிவா
கவிதை: இமையழகி
கண்ணுக்கும் கருவிழிக்கும் மைபூசி வந்தவளே இமையை விரித்து நீ அம்பு ஏய்ந்தலாமா?.
- கவிஞர் சிவா
கவிதை: உயிரே
பனை கூந்தல் நுனியினிலே தொங்குதடி வீடு காற்றுக்கும் மழைக்கும் ஏங்குதடி வீடு ஒத்தையில வாடுதடி ஒத்த உயிர் உள்ளே உயிரே நீ எப்போ வந்து வாழப்போற புள்ள.?
- கவிஞர் சிவா
கவிதை: காதல் ஹைக்கூ:
நீண்டு நிற்குதடி மூங்கில் காடு முன்னே பின்னே அதை உடைச்சி ஓட்டப்போடு ஓட்டையாவும் மெல்ல பொத்தி ஊதி பாரு உன் வேட்கை யாவும் தீரும் மடி பாட்டுப்பாடு
- கவிஞர் சிவா
கவிதை: வெட்கம்
குஞ்சம் கட்டும் கூதீர் பூவே... கூதிர் காலத்தில் உன் வெட்கம் பீச்சி அடிக்கிறது ஏன்.
- கவிஞர் சிவா
No comments: