
Introduction:
Admin_Siva
July 14, 2024
கண்ணால் கவிப்பாடும் கருவாச்சி என் வாழ்வின் கலந்து உறவாடுவது எப்போது?
மெத்தை விரிக்கும் வெள்ளை முயல் குட்டி துள்ளி குதிக்கும் அவள் கண்ணில்.
பேச துடிக்கும் சொல்லும் கோவம் தனிக்கும் மனசில் மெளனம் கூட வெடியாய் வெடிக்கும்.
மஞ்சள் புடவைகட்டி மையால் மீசை வரைந்து இதழுக்கும் சாயம் பூசி இமைக்காமல் பின்னால் நின்னால் பார் அவளே பின் வரிசை ஆடலரசி.
அவள் முறைத்தாள் மேற்கு தொடர்ச்சி மலையும் வெடிக்கும் அவள் சிரித்தாள் சிவகங்கையில் பெயாத மழையும் பெய்யும்.
கருவாச்சி விழியால் மிளிரும் பார்வை விரிந்த கன்னியோ உனக்கு.
அவள் புன்னகையில் துவங்கி அவள் கண்ணீர் வரை கணக்கிட முடியாத உள் உணர்வு.
நிறைமாதி பெண்மை கூட தான் கருவுற்றேன் என அவள் விழியில் சொல்கிறது.
No comments: