tamilquotes.blog
அப்பா ஹைக்கூ கவிதைகள்
Introduction:
அப்பா வின் ஹைக்கூ கவிதைகள், கவிதை மீது காதல் கொண்டு www.tamilquotes.blog வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :
Admin_Siva
July 11, 2024
அப்பா வீரம்
"ஆயிரம் வீரன் இம்மண்ணில் பிறந்து இருக்காலம் அதில் சிறந்தவர் என் அப்பா."

அப்பா பாசம்
"பாசம் வைக்க பலர் வரலாம் போகலாம் ஆனால் என் அப்பாவின் பாசத்தை யாரும் தரமுடியாது."

அப்பா விவசாயி
"அழுக்கு வேட்டியும் தலையில் தலைப்பாகையும் வேர்வையில் குளிக்கும் வேதனையும் சொல்லும் என் அப்பா ஒரு விவசாயி என்று."

அப்பாவின் நிழல்
"கையில் பணம் இல்லை என்றாலும் எங்கள் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறையில்லை அதான் அப்பா நிழலாய் நிற்கிறார் ."

அப்பாவின் மறைவு
"எல்லோரும் மகிழ்ச்சியை தேடுவீர்கள் நான் மட்டும் மகிழ்ச்சியெனும் வார்த்தையை கற்றுக்கொடுத்த என் அப்பாவை தேடுகிறேன்."

அப்பா பாசம்
"ஒருமுறை கூட திகட்டாத பாசத்தை நித்தம் ஊட்டியவர் என் அப்பா."

அப்பாவின் மூச்சு
"காற்றோடு கரைந்து போன என் அப்பாவின் மூச்சு காற்றை தேடி இந்த பூமி பந்தில் அலைகிறேன்."

அப்பாவின் நடிப்பு
"உலகமே இன்று நடிக்கிறது என் அப்பாவும் நடிப்பார் எனக்கு சோறு ஊட்டும் போது ."

அப்பா இறப்பு
"நித்தம் கனவுகளை மட்டுமே என்னுள் விதைத்தவர் இன்று நான் வளர்ந்து நிற்பதை காணமால் கூட இறந்து போய் விட்டார்."

அப்பாவின் ஆசை
"அப்பாவின் ஆசையை நான் நிறைவேற்றிவிட்டேன் ஆனால் என் ஆசையை தான் அவர் நிறைவேற்ற இந்தவுலகில் இல்லை."

Conclusion:
ஹைக்கூ கவிதைகள் _ அப்பா . இந்த பதிவு உங்களுக்கு மென்மையான உணர்வை தந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
nagarajasivaspeech@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .
No comments: